சத்யராஜின் மகள் நடிக்கும் குறும்படம்..! | தினகரன் வாரமஞ்சரி

சத்யராஜின் மகள் நடிக்கும் குறும்படம்..!

சத்யராஜ் மற்றும் அவரது மகன் சிபிராஜ் என இருவரும் நடிப்பில் பிஸியாக இருப்பவர்கள். ஆனால் சத்யராஜின் மகள் திவ்யா நடிப்பில் ஆர்வம் காட்டாமல் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். தற்போது விளையாட்டின் முக்கியத்துவத்தையும், ஊட்டச்சத்து உள்ள உணவு பழக்கங்களை மேற்கொள்வதால் உண்டாகும் பயன்களை பற்றி எடுக்கப்படும் ஒரு குறும்படத்தில் நடிக்க இருக்கிறார் திவ்யா சத்யராஜ். இந்த குறும்படத்தில் இவரோடு இணைந்து, கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் வீரர்களும் நடிக்க இருக்கிறார்கள்.
இந்த குறும்படத்தைப் பற்றி திவ்யா சத்யராஜ் கூறும் போது, “உடற்பயிற்சி என்பது வேறு, கட்டுப்பாடான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது என்பது வேறு. ஆனால் என்னிடம் ஆலோசனை கேட்டு வரும் சிலர், உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டால் உடற்பயிற்சி செய்ய தேவை இல்லை எனவும், உடற்பயிற்சி செய்தால் உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க தேவை இல்லை என்கின்ற மன நிலையிலும் தான் இருக்கின்றனர். உடற்பயிற்சி என்பது நம் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க கூடாத ஒன்று. 

Comments