புதிய வலுச்சக்தி களஞ்சிய மூலப்பொருள் துறையில் முதலாவது ஆக்கவுரிமை | தினகரன் வாரமஞ்சரி

புதிய வலுச்சக்தி களஞ்சிய மூலப்பொருள் துறையில் முதலாவது ஆக்கவுரிமை

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனம் இந்தியாவின் அறிவியல் மற்றும் கைத்தொழில் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து வலுச்சக்தி களஞ்சிய மூலப்பொருட்கள் பரப்பில் அதன் முதலாவது ஆக்கவுரிமையை பதிவு செய்தது. ஜோன் கீல்ஸ் ஆராய்ச்சிப் பிரிவினால் உருவாக்கப்பட்ட எண்ணத்தின் அடிப்படையில் இந்தியாவின் தேசிய உலோக ஆய்வுகூடத்தினால் மேற்காள்ளப்பட்ட கருத்திட்டத்தின் விளைவே இந்த ஆக்கவுரிமை விண்ணப்பமாகும்.
தேசிய உலோக ஆய்வுகூடம் இந்தியாவின் ஜார்கன்ட் ஜம்ஷபூரில் அமைந்துள்ள விஞ்ஞான மற்றும் கைத்தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒரு ஆராய்ச்சி ஆய்வுகூடமாகும். அத்துடன் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் ஜோன் கீல்ஸ் ஆராய்ச்சிப் பிரிவு நனோ டெக்னோலஜி மற்றும் உயர்தரமான மூலப்பொருட்கள், நிலைத்திருக்கும் வலுசக்தி மற்றும் வலுசக்தி களஞ்சியம், உயிர்த் தொழில் நுட்பம் மற்றும் செயற்கை உயிாியல், உணவும் நீரும் மற்றும் பெளதீக மற்றும் இணைய விடயங்கள் (IoT) தொடர்பான விடயப் பரப்பில் ஆராய்ச்சி செய்கின்றது.
வலுசக்தி களஞ்சியமாக பயன்படுத்தக்கூடிய கலவை நனோ மூலப்பொருள் தொடர்பாக ஆக்கவுரிமை விண்ணப்பத்தை 2016 டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் ஆக்கவுரிமை காரியாலயத்தில் கோவைப்படுத்தியது. இந்த கலவை நனோ மூலப்பொருளை இலங்கையில் கிடைக்கக்கூடிய மூலப்பொருளைக் கொண்டு தயாாிக்க முடிவதுடன், உயிாியல் உடனியைவுவாகவும், அதையொத்த மூலப்பொருட்களுடன் ஒப்பிடுகையில் ஒரு அலகுக்கான ஆகுசெலவு மிகக் குறைந்ததாகவும் பாரிய உயர்தரமுடையதாகவும் இருக்கின்றது. ஜோன் கீல்ஸ் ஆராய்ச்சிப் பிரிவு தனது புத்தாக்கப் பணிகளைத் தொடர்வதுடன், இந்த புதிய ஆக்கவுரிமை விண்ணப்பமானது, மேற்குறிப்பிட்ட விடயப்பரப்பில் புலமைச் சொத்துக்களை உருவாக்குவதில் அவர்களுடைய அர்ப்பணிப்பின் ஒருபகுதியாகும். நாட்டுக்கும் குழுமத்திற்கும் பெறுமதியான ஆற்றலுடைய புதிய தொழில்நுட்பத்தை வெளிக்கொண்டுவரும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் ஊடாக இந்த ஆராய்ச்சியை ஜோன் கீல்ஸ் ஆராய்ச்சிப் பிரிவின் உப தலைவர் டாக்டர் முதித செனரத்யாபா இலங்கையின் இளம் விஞ்ஞானிகளைக் கொண்ட அவருடைய சிறிய குழுவினருடன் முன்னெடுத்தார்.

Comments