Shopping Star -பருவம் 4இல்வெற்றியாளராக அருளானந்தம் | தினகரன் வாரமஞ்சரி

Shopping Star -பருவம் 4இல்வெற்றியாளராக அருளானந்தம்

யுனிலீவர் ஸ்ரீலங்கா மற்றும் காகில்ஸ் புட் சிட்டி ஆகியன இணைந்து முன்னெடுத்திருந்த Shopping Star - பருவம் 4 ஊக்குவிப்புத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருந்தன. இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் மாபெரும் இறுதி வெற்றியாளர் தெரிவு தலவத்துகொட காகில்ஸ் புட் சிட்டியில் 2016 டிசம்வர் 27ம் திகதி நடைபெற்றது.

மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பத்து போட்டியாளர்கள் இதன் போது 2 மில்லியன் ரூபாய் மாபெரும் பரிசுக்காக போட்டியிட்டிருந்தனர். இரண்டாம் பரிசாக 1 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டிருந்ததுடன், மூன்றாம் பரிசாக 500,000 ரூபாய் வழங்கப்பட்டிருந்தது. முதல் பரிசை மட்டக்களப்பைச் சேர்ந்த டி.அருளானந்தம் பெற்றுக்கொண்டார். இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை காலியைச் சேர்ந்த எம்.கே.என். சமரசேகர மற்றும் கண்டியைச் சேர்ந்த ஓஷதி ஜினான்ஜலி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். ஏனைய 7 போட்டியாளர்களுக்கும் 50000 ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களை யுனிலீவர் ஸ்ரீ லங்கா மற்றும் காகில்ஸ் புட் சிட்டி ஆகியன இணைந்து வழங்கியிருந்தன.
இந்த போட்டியில் வெற்றியீட்டிய அருளானந்தம் கருத்துத் தெரிவிக்கையில், “நான் இதுவரை அனுபவித்திருந்த மகிழ்ச்சிகரமான மற்றும் விறுவிறுப்பான அனுபவமாக இது அமைந்திருந்தது. மாவட்ட மட்ட போட்டியில் நான் தெரிவு செய்யப்பட்டது முதல் மாபெரும் இறுதிப்போட்டியில் மாபெரும் இறுதிப்பரிசை வென்றமை வரையில் நான் அனுபவித்த விறுவிறுப்பையும், சுவாரஸ்யத்தையும் வார்த்தைகளால் குறிப்பிட முடியாது. Shopping Star என்பது ஒப்பற்ற ஒரு ஊக்குவிப்புத்திட்டமாகும், இதன் மூலமாக மகிழ்ச்சியூட்டும் அனுபவம் வழங்கப்படுவதுடன், இந்த போட்டியை ஏற்பாடு செய்திருந்தமைக்காக யுனிலீவர் ஸ்ரீலங்கா மற்றும் காகில்ஸ் புட் சிட்டி ஆகியவற்றுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
Shopping Star பருவம் 4இன் முதல் சுற்று ஒக்டோபர் 17ம் திகதி முதல் ஆரம்பமாகியிருந்தது. எட்டு வாரங்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த போட்டியின் போது நாட்டின் சகல மாவட்டங்களும் உள்வாங்கப்பட்டிருந்தன. யுனிலீவர் வர்த்தக நாமத்தின் பட்டியலிடப்பட்ட Signal, Lifebuoy, Sunsilk, Lipton, Pears, Vim, Surf Excel மற்றும் Vaseline எட்டு நாமங்களிலிருந்து ஆகக்குறைந்தது மூன்று நாமங்களைச் சேர்ந்த பொருட்களை கொள்வனவு செய்யும் போது, மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை பெற்றிருந்தனர். அதிலிருந்து 10 வெற்றியாளர்கள் இறுதிச்சுற்றுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
 

Comments