சேலை வாசமும் சோலையின் பொறாமையும்! | தினகரன் வாரமஞ்சரி

சேலை வாசமும் சோலையின் பொறாமையும்!

றாஹில்

அழகே அழகே

நீ வந்து சென்ற இடத்தில்

ஒரு வாரம் வீசும் பூக்களின் வாசமே!

அழகே அழகே

நீ வந்து இருந்த பொழுதில்

முழுவருடமும் கேட்கும் குயில்களின் கீதமே!

(அழகே)

உன் புன்னகை பார்க்க

காலடியில் விழும் தாரகைக் கூட்டமே!

உன் கண்ணுடன் பேச

கவிதை எழுதித் தருவதே இளைஞர் நாட்டமே!

உன்னை நினைக்கும்போது

பாலாய் மாறும் என் குருதியே!

உன்னை அணைக்கும் போது

நூலாய் ஆகும் என் பருவமே!

மின்சாரம் தடைப்பட்டபோதும்

அறையில் ஒளிபரவியது

என்னுடன் நீ இருந்ததாலே!

உன் ஈரம் துடைத்தபோது

கார்மேகம் அதைக் கேட்டது

மழை கமகமக்கணும் என்பதாலே!

தேனீக்களிடம் நான்கேட்டேன்

இறுதி ஆசை என்னவென்று

உன் இதழ்கடித்து தேன் குடிக்கணும் என்றதே!

தேன்நிலவிடம் வான் சொன்னது

உன்முகம் இனிவேண்டாம்

என்னவள் முகம் தனக்கு வேண்டும் என்றதே!

(அழகே)

உன் கூந்தலைப் பூக்க

ரோஜாச் செடி ஆசைப்பட்டதே!

உன் வாசலில் நிற்க

ராஜா ராணிமனம் முடிவெடுக்குமே!

நீ நாணல்காட்ருக்குச் சென்றாலே

அது கரும்புத்தோட்டமாகுமே!

சோலைக்கு நீ செல்லாதே

அந்தப் பூக்களுக்குப் பொறாமை வருமே!

மாலை நேரம் நகராது நிற்குமே

உந்தன் சேலைவாசம் நுகர்ந்தாலே!

பிரம்மன் உன்னைப் படைத்தான்

பார்த்து வியந்து உன்னைத் தொழுதானே!

(அழகே) 

Comments