எதிர்கால சந்ததியினருக்காக கற்றல் தளம் ஒன்றினை கட்டமைக்கும் NDB | தினகரன் வாரமஞ்சரி

எதிர்கால சந்ததியினருக்காக கற்றல் தளம் ஒன்றினை கட்டமைக்கும் NDB

 கூட்டாண்மை நிறுவனங்கள் தமது கட்டமைப்புகளை மீளமைத்து, தமது பணியாளர்களை வர்த்தக உலகிற்கு வழிகாட்டும் வேளையில், ​ெநஷனல் டெவலப்மென்ட் பாங்க் பிஎல்சி (NDB) ஆனது, இந்த இளம் தலைமுறையினருக்கு கற்கை சூழலை அளிக்கும் வகையில் உறுதியான முன்னெடுப்புகளை மேற்கொள்கின்றது.

மகிழ்ச்சிகரமானதும், சிறந்த செயற்பாட்டினை வெளிப்படுத்துவதுமான பணியாளர்கள் நிறுவனம் ஒன்றின் வெற்றிக்கான முக்கிய காரணமாவர் என்று குறிப்பிட்ட NDB பயிற்சிகளுக்கான சிரேஷ்ட முகாமையாளர் ரொஹான் மனாசே தொழினுட்பம் மற்றும் உலகமயமாதலின் புத்தெழுச்சியுடன், இளம் தலைமுறையினர் மிகுந்த தீவிரத்தன்மையை பெற்றுள்ளதோடு, தமது நவீன அணுகுமுறைகளினால் பணித்தலத்தில் முழு முனைப்பினையும் அளித்து, வர்த்தக உலகத்ததிற்கு புத்தூக்கம் அளிப்பதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளனர்.

சாியான திசையினை காண்பித்து, அவர்களின் கருத்தாக்கம் மற்றும் புத்தாக்க சிந்தனைகளுக்கு களம் அளிப்பதன் ஊடாக, பொருளாதாரத்தினை கட்டியெழுப்பும் பாதையில் அவர்களின் நேர்மறை எண்ணங்களையும் மிகுதியாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

NDB ஆனது 2016ம் ஆண்டில் சராசரியாக 100 உள்ளக பயிற்சி நடவடிக்கைகளையும் 250 வெளிக்கள நிழ்ச்சித் திட்டங்களையும் முன்னெடுத்துள்ளது.

எமது பணியாளர்கள் மத்தியில் NDB இன் பெறுமானங்களை வலியுறுத்துதல் தொடர்பில் தீவிர மனப்பாங்கினை கொண்டிருந்தோம். ஏறத்தாள 92% பணியாளர்களுக்கு கடந்த ஆண்டில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. இது சராசரியாக ஒரு பணியாளருக்கு 6.0 நாட்கள் பயிற்சியளித்தலை ஒத்ததாகும் என்பதை சுட்டிக்காட்டினார்.

NDB இல் பயிற்சியானது, உள்நாடு, உள்ளக மற்றும் வெளிநாடு என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பயிற்சியானது, பயிற்சி தேவைகளுக்கு முகம் கொடுக்கும் வகையில்

பொது நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கு பணியாளர்கள் செல்லும் வகையில் ஒழுங்குசெய்யப்படுகின்றது. உள்ளக பயிற்சியானது, தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள், நிறுவனத்திற்குள் அல்லது வெளிக்கள அமைவிடம் ஒன்றில் NDB பணியாளர் அங்கத்தவர்களுக்கு மட்டுமென நடத்தப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சித்திட்டங்கள், தனிப்பயனாக்கப்பட்டு NDB இன் பெறுமானங்கள் மற்றும் கலாசாரத்திற்கு ஏற்ற வகையில் நடாத்தப்படுவதுடன், தொழிற்துறைப் போக்குகளுடன் இணைந்ததாகவும் முன்னெடுக்கப்படும்.

Comments