டேர்டன்ஸ் மருத்துவமனையின் முன்மாதிரியான எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை அணுகுமுறைகள் | தினகரன் வாரமஞ்சரி

டேர்டன்ஸ் மருத்துவமனையின் முன்மாதிரியான எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை அணுகுமுறைகள்

மூட்டுவலி காரணமாக இலங்கையில் முழங்கால், இடுப்பு, மணிக்கட்டு மற்றும் விரல்கள் மாற்று அறுவை சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 20 சத வீதம் அதிகரிப்பதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

 குறிப்பாக 40 வயதுக்குட்பட்ட அலுவலக ஊழியர்கள் மூட்டு வலியினால் அதிகம் அவதிக்குள்ளாவதுடன், தவறான வாழ்க்கைமுறைப் பழக்கங்கள் மற்றும் போதிய உடற்பயிற்சியின்மை இதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

இது தொடர்பாக டேர்டன்ஸ் மருத்துவமனையின் எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை துறையின் நிபுணர் ஞானசேகரம் கருத்து தெரிவிக்கையில், “வழக்கமாக எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நான்கில் ஒரு பங்கு நோயாளிகள் புதிய மூட்டு சரியாகப் பொருந்தாமல் அவதிக்குள்ளாகும் நிலை காணப்படுகிறது.

 டேர்டன்ஸ் மருத்துவமனையின் நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மையத்தில் அதிக இரத்தக்கசிவு மற்றும் வலி இல்லாதவாறு எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதுடன், சிகிச்சை முடிந்து 72 மணித்தியாலங்களுக்குள் நோயாளிகள் தமது வழக்கமான செயற்பாடுகளுக்கு திரும்பக்கூடிய நிலைமை ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது” என்றார்.

டேர்டன்ஸ் மருத்துவமனையின் பிரத்தியேகமான எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மையமானது இலங்கையில் எலும்பு மற்றும் மூட்டு வலிக்கான 24 மணிநேரம் இயங்கும் விரைவு அணுகு முறைகளுக்கான முன்னணி சிகிச்சை மையமாக கருதப்படுகின்றது.

டேர்டன்ஸ் மருத்துவமனையின் எலும்பு மூட்டு அறுவை நடைமுறைகளின் மற்றொரு முக்கியமான பகுதியாக, முன்னணி எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள், கதிரியக்க வல்லுனர்கள், சிறப்புப் பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த மருத்துவ தாதியர்களின் அர்ப்பணிப்பான சேவையினை குறிப்பிடலாம். 

Comments