நடிகைகளுக்கு தற்காப்பு கலை அவசியம் | தினகரன் வாரமஞ்சரி

நடிகைகளுக்கு தற்காப்பு கலை அவசியம்

கிருஷ்ணா, டி.ராஜேந்தர், விதார்த், வெங்கட் பிரபு, தன்ஷிகா உள்பட பலர் நடித்தி ருக்கும் படம்‘விழித்திரு’. மீரா கதிரவன் இயக்கி தனது நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.

‘விழித்திரு’ படத்தில் ஹீரோ, ஹரோயின் என்று யாரும் இல்லை. எல்லோருமே கதையின் மைந்தர்கள் தான். இது ஓர் இரவில் நடக்கும் கதை. 4 கதைகள் உள்ளன. இதில் நான் வரும் கதையும் ஒன்று. என் கதையில் தம்பி ராமையாவும், விதார்த்தும் உள்ளனர்.

டி.ராஜேந்தரின் ரசிகையாக நான் நடித்திருக்கிறேன். அவருடன் ஆடியும் இருக்கிறேன்.

நடிகை பாவனாவுக்கு நடந்த கொடுமை பற்றி கேள்விப்பட்டு வேதனை அடைந்தேன். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதுதான் காரணம். அவற்றை முறைப்படுத்த வேண்டும். பாலியல் குற்றத்துக்கு அரபு நாடுகள் போல கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.

நடிகைகள் தங்கள் பாதுகாப்பை தாங்களே உறுதி செ ய்ய வேண்டும். குறைந்தபட்சம் தற்காப்பு கலைகளை அவர்கள் கற்கலாம். அது மிகவும் நல்லது. நானும் அதை படித்திருக்கிறேன். படப்பிடிப்பில் மது அருந்திவிட்டு கலாட்டா செய்தவர்களை அடித்து விரட்டி இருக்கிறேன். விரைவில் பெண்களுக்கான தற்காப்பு கலை பயிற்சி மையம் தொடங்க நினைத்திருக்கிறேன் என்று கூறினார்.

‘விழித்திரு’ படம் பற்றி கூறிய மீரா கதிரவன் கூறும்போது, இந்த படத்தின் அறிமுக இசை அமைப்பாளர் சத்யன் மகாலிங்கம் இசையில் டி.ராஜேந்தர், ஜி.வி.பிரகாஷ், சந்தோஷ் நாராயணன் உள்பட 7 இசை அமைப்பாளர்கள் பாடி இருக்கிறார்கள்.

ஒரு தயாரிப்பாளரின் வலி என்ன என்பதை இந்த படத்தில் தெரிந்து கொண்டேன். கிருஷ்ணா டூப் இல்லாமல் சவாலான காட்சியில் நடித்திருக்கிறார். இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாக இருக்கும். இந்த படத்தை சவுந்தர்யன் பிக்சர்ஸ் சார்பில் விடியல் ராஜு வாங்கி வெளியிடுகிறார் என்றார். 

Comments