நடிகை ஜெயசுதாவின் | தினகரன் வாரமஞ்சரி

நடிகை ஜெயசுதாவின்

பிரபல ​ெபாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் உறவினரும், நடிகை ஜெயசுதாவின் கணவருமான நிதின் துவர்காதாஸ் கபூர் மும்பையில் உள்ள குடியிருப்புப் பகுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட நிதின் மன அழுத்தம் காரணமாக கடந்த ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

58 வயதான நிதின் மும்பையின் மேற்கு பகுதியில் உள்ள அந்தேரி குடியிருப்புப் பகுதியின் 6 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நிதின், அவரது தங்கையின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் நிதினுக்கு 18 வருடங்களாக வேலை இல்லை என்றும், அவரது குடும்பம் ஐதராபாத்தில் வாழ்ந்து வருவதாகவும், நிதின் மட்டும் மும்பையில் வாழ்ந்து வருவதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள பொலிசார், சம்பவ இடத்தில் இருந்து தற்கொலைக் கடிதம் ஏதும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது உயிரிழப்பு ஒரு விபத்தாக இருக்கக்கூடும் என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Comments