மணிரத்னம் படத்தில் | தினகரன் வாரமஞ்சரி

மணிரத்னம் படத்தில்

ணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் அரவிந்த்சாமி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1991-ஆம் ஆண்டு வெளிவந்த ‘தளபதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அரவிந்த்சாமி. அதைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’, ‘பம்பாய்’, ‘அலைபாயுதே’, ‘கடல்‘ ஆகிய படங்களிலும் அரவிந்த்சாமி நடித்துள்ளார்.

பல வருடங்களாக சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த அரவிந்த்சாமியை மீண்டும் சினிமாவுக்குள் கொண்டு வந்தவரும் மணிரத்னம்தான். அதன்பிறகு, தற்போது சினிமாவில் பிசியான நடிகராக மாறிவிட்டார் அரவிந்த்சாமி. இந்நிலையில், மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் அரவிந்த் சாமி நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் தற்போது கார்த்தியை வைத்து ‘காற்று வெளியிடை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை முடித்த கையோடு தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க மணிரத்னம் முடிவு செய்துள்ளார்.இப்படத்தில்தான் முக்கிய வேடத்தில் நடிக்க அரவிந்த்சாமியை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Comments