கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் CASONS கிளை | தினகரன் வாரமஞ்சரி

கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் CASONS கிளை

இலங்கையில் உள்ள பழைய வாடகை கார் நிறுவனங்களில் ஒன்றான CASONS வாடகை கார் நிறுவனம் அண்மையில் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் அதன் கருமபீடமொன்றை திறந்துள்ளது.

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளுக்காக சாரதியுடன் கூடிய 500இற்கு மேற்பட்ட புதிய வாகனங்கள் இங்கு நிறுத்தப்பட்டுள்ளன.

Axlo, Prius, Premio, Allion போன்ற சொகுசு வாகனங்களும் Suzuki, Alto, Axia போன்ற சாதாரண சக கார்களுடன் Merceds Bexz, BMW, Audi, Suv 4x4 ரக அதிசொகுசு வாகனங்களுடன் பயணிகள் வேன்களும் சேவைக்காக தயாராக உள்ளன.

பென்ஸ் ரக அதிசொகுசு ரக வாகனங்களை கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் சேவையிலீடுபடுத்தும் முதலாவது பயணச் சேவை முகவர் நிறுவனம் CASONS வாடகை கார் நிறுவனமாகும்.

விமான நிலையத்துக்கு வருகை தருதல், அங்கிருந்து செல்லுதல், சாரதியின்றி அல்லது சாரதியுடனான வாடகை கார் சேவை, சுற்றுலா செல்லல், விசேட பயணங்கள், ஹோட்டல் சேவை மட்டுமன்றி வாடகைக்கு மோட்டார் சைக்கிள்கள் ஆகிய சேவைகளை மேற்படி கருமபீட்டில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

சொகுசு கார்களை குறுகிய மற்றும் நீண்ட கால வாடகை அடிப்படையில் வழங்குவதை CASONS நிறுவனமே இலங்கையில் முதல் பணிப்பாளர் M. Zakir இன் யோசனையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உயர்தர பாவனையாளர்களிடம் சொகுசு வாகனங்களின் தேவை அதிகரித்திருப்பதை உணர்ந்ததையடுத்தே அவருக்கு இவ்வாறான சொகுசு கார் வாடகை சேவைக்கான யோசனை வந்ததாகத் தெரிவித்தார் M.Zakir. Zakir Ahmed 1987 இல் CASONS வாடகை கார் நிறுவனத்தை ஆரம்பித்தார். பின்னர் 1991 இல் Zufer Ahmed உடன் இணைந்துகொண்டார்.

அதனையடுத்து குடும்ப வியாபாரமாகிய CASONS நிறுவன வாடகை கார் சேவை தற்போது மிகவும் அதிக கேள்வியுடன் கூடிய முன்னணி தரத்துடன் கூடிய வாடகை கார் சேவை நிறுவனமாக இப்போது மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments