டுசிட்தானி சொகுசு மாடிவீட்டு தொகுதி பலப்பிட்டியவில் | தினகரன் வாரமஞ்சரி

டுசிட்தானி சொகுசு மாடிவீட்டு தொகுதி பலப்பிட்டியவில்

இலங்கையின் மேற்கு கரையோரத்தில் உள்ள பலப்பிட்டிய பிரதேசத்தில் 8.5 ஏக்கர் நிலப்பரப்பில் டுசிட் தானி நிறுவனம் பாரிய வீடமைப்பு தொகுதியொன்றை நிர்மாணிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த வீடமைப்புத் தொகுதியின் நிர்மாணப்பணி சீனாவின் சைனோ கிரேட்வோல் சர்வதேச என்ஜினியரிங் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சொகுசு மாடிவீட்டுத் தொகுதிக்கான ஒப்பந்தம் டுசிட்தானி நிறுவனத்தின் கொழும்பு அலுவலகத்தில் வைத்து அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.

மேற்படி சைனோ கிரேட்வோல் சர்வதேச என்ஜினியரிங் நிறுவனம் நிர்மாண வேலைகளில் குறிப்பாக வெளிநாட்டு சந்தைகளுக்கான நிர்மாணங்களில் பல வருடகால அனுபவத்தைக் கொண்டது. உலகளாவிய ரீதியில் நூற்றுக்கு மேற்பட்ட 5 நட்சத்திர ஹோட்டல்களை நிர்மாணித்த அனுபவம் இந்நிறுவனத்துக்கு உள்ளது.

இலங்கையின் மேற்கு கரையோரத்தின் பலப்பிட்டியவில் அமையவுள்ள மேற்படி வீடமைப்புத் தொகுதி உள்ளூர் மற்றும் வெளிநாட்டினருக்கு கடற்கரையோரம் அனைத்து சொகுசு வசதிகளையும் கொண்ட தொகுதி வீடுகளை கொண்டுள்ளது. இலங்கையின் கரையோரப் பகுதியில் இவ்வாறு அமையும் சொகுசு வீட்டுத்தொகுதி இதுவாகும்.

டுசிட்தானி நிறுவனத்தின் இந்த வீட்டுத்தொகுதி டுசிட் சர்வதேச 5 நட்சத்திர ஹோட்டல் துறையினரால் நிர்வகிக்கப்படுகிறது.

மூன்று கட்டங்களில் அமையும் இந்த தொகுதியின் முதற்கட்டத்தில் 162 தொடர் மாடி வீடுகளைக்கொண்டது. இந்த வீடுகள் அனைத்து வசதிகளுடன் வனப்புமிக்க கடற்கரை தோற்றத்துடன் கூடியவை.

இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களில் மேலும் பல சொகுசுமாடி மனைகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. அத்துடன் இந்த வீடமைப்பு தொகுதியில் சர்வதேச தரத்துடன் கூடிய 15 உணவகங்கள், கபே மற்றும் பார்கள், சொகுசு குளியல் நிலையம், உடற்பயிற்சி நிலையம் மற்றும் 2500 சதுர மீட்டருடன் கூடிய மாநாட்டு மண்டபம் மற்றும் மாடியின் மேற்தளத்தில் டென்னிஸ் கோர்ட் ஆகியவற்றுடன் மதங்களுக்கான வணக்கஸ்தலங்கள் ஆகியவையும் அமைக்கப்படவுள்ளன.

மேற்படி கடலோர வீடமைப்புத் தொகுதியின் B கோபுரம் ஏற்கனவே முழுமையாக விற்பனை செய்யப்பட்டுவிட்ட நிலையில் A கோபுரம் தற்போது சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. 

Comments