முதலாவது இலவச கல்வித் தளமேடை 'YouCompare.lk' பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

முதலாவது இலவச கல்வித் தளமேடை 'YouCompare.lk' பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் ஆரம்பம்

அண்மைய காலங்களைப் பொறுத்தவரையில், டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு என்பது தேசத்தில் பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறைகளுக்கு மட்டும் பிரத்தியேகமான ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.

எனினும் கல்வித்துறையானது டிஜிட்டல் மயமாவதில் பின்தங்கியுள்ளதுடன், தேசிய மட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அறிவு வீதமானது இன்னமும் 27% ஆகவே காணப்படுகின்றது. குறிப்பாக, இடை நிலைக்கு கல்விக்குப் பின்னரான கல்வி வழிமுறைகளைப் பொறுத்தவரையில் இணையத்தை அடிப்படையாகக் கொண்ட தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வசதிகளின்மையானது நிச்சயப்போக்கற்ற தொழில்நுட்ப அறிவுத்திறன் கொண்ட தலைமுறைக்கே வழிகோலியுள்ளது. இதை மனதில் கொண்டு, இலங்கையின் முதலாவது கல்வி வள ஒப்பீட்டுத் தளமேடையான YouCompare.lk (YC) இனை Comparison Private Limited நிறுவனம் ஆரம்பித்து வைத்துள்ளது.

வகுப்பறையிலும், பல்கலைக்கழகத்திலும் தொழில்நுட்பத்தின் மூலமாக அதிகமான அறிவை எதிர்பார்க்கின்ற இன்றைய காலகட்டத்து மாணவர்களுக்காக அனைத்தையும் உள்ளடக்கிய சாதனமாக, YC வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது. இந்த தளமேடையை அனைவரும் இலவசமாக உபயோகித்துக்கொள்ள முடியும்.

அளவற்ற தகவல் விபரங்களை இது வழங்குகின்றது. விருப்பத்திற்குரிய தொழில் துறை, ஆர்வங்கள் மற்றும் கட்டுபடியாகக்கூடிய கற்கைநெறிகள் போன்ற விபரங்களின் அடிப்படையில் தமக்கு பொருத்தமான கற்கை நிலையங்களை அல்லது கற்கைநெறிகளின் விபரங்களை இதன் பயனர்கள் கண்டறிய முடியும்.

சமத்துவமான மாணவர் ஆலோசனை, தொழில்துறை வழிகாட்டல், அமர்வுகள், கட்டுரைகள் மற்றும் கேள்காண் (ஓடியோவிசுவல்) வளங்கள் போன்றவற்றை ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் இத்தளமேடை வழங்குகின்றது. இலவசமான மாணவர் பதிவு முறையை நாடுகின்ற கல்வி நிறுவனங்களின் தேவைகளையும் ஈடுசெய்யும் வகையில் YC வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

இதில் தம்மைப் பதிவு செய்துகொண்டுள்ள நிறுவனங்கள், தேசிய அளவில் டிஜிட்டல் சார்ந்த கண்ணோட்டம் தொடர்பில் கற்கைநெறிகளை அளவீடு செய்வதற்கு அல்லது திருத்தங்களை மேற்கொள்வதற்கு அவற்றுக்கு இடமளிக்கின்ற கல்வி நிலைய நுழைமுகங்கள் (Education Institute Portal) இத்தளமேடையில் கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளன.

Comments