அவுஸ்திரேலியாவின் | தினகரன் வாரமஞ்சரி

அவுஸ்திரேலியாவின்

20 வயதிற்குள் 500 ஓட்டங்கள் எடுத்து 119 வருட கால அவுஸ்திரேலியாவின் சாதனையை ராஞ்சி டெஸ்டில் முறியடித்துள்ளார் தொடக்க வீரர் ரென்ஷா.

இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அவுஸ்திரேலிய அணியின் இளம் தொடக்க வீரரான ரென்ஷா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். புனே, பெங்களூர் டெஸ்டில் அரைசதம் அடித்தார்.

ராஞ்சியில் தொடங்கிய போட்டியில் 44 ஓட்டங்கள் எடுத்தார். இவர் 11வது இன்னிங்சில் இந்த ஓட்டங்களை எடுத்துள்ளார். 21 வயதை பூர்த்தி செய்யாத இளம் வீரரான இவர், டெஸ்ட் போட்டிகளில் 500 ஓட்டங்கள் எடுத்து 113 வருட ஆஸ்திரேலிய கிரிக்கெட் சாதனையை முறியடித்துள்ளார்.

இதற்கு முன் கிளெம் ஹில் 21 வயதிற்குள் 482 ஓட்டங்கள் குவித்திருந்தார். இதுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்த சாதனையை தற்போது ரென்ஷா முறியடித்துள்ளார். இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது 21 வயதிற்குள் 2023 ஓட்டங்கள் குவித்திருந்தார். 

Comments