கபடி போட்டியில் கலக்கியது நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி | தினகரன் வாரமஞ்சரி

கபடி போட்டியில் கலக்கியது நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி

புங்குடுதீவு குறுப் நிருபர்

தீவக வலய பெண்களுக்கான கபடிப் போட்டியில் நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரி அணி வெற்றிபெற்று வாகை சூடியது.

தீவக வலய பாடசாலைகளுக்கிடையிலான கபடிப் போட்டிகள் (14) ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றன.

20 வயதுப் பிரிவினருக்கான இறுதிப்போட்டியில் காரைநகர் இந்துக் கல்லூரி அணியும் நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரி அணியும் பலப் பரீட்சை நடத்தின.

முதல் முதல் பாதியாட்டத்தில் 5 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரி அணி இராண்டாம் பாதியாட்டத்திலும் முன்னிலை பெற்று 44:28 என்ற புள்ளியடிப்படையில் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

இரண்டாவது இடத்தை காரைநகர் இந்துக்கல்லூரி அணி பெற்றது.

இதேவேளை 18 வயதுப் பிரிவினருக்கான கபடி இறுதிப் போட்டியில் புங்குடுதீவு ஸ்ரீ சித்திவிநாயகர் மகாவித்தியாலய அணியை எதிர்கொண்ட நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரி அணி 40:24 என்ற புள்ளியடிப்படையில் வென்று அசத்தியது.

இரண்டாவது இடத்தை புங்குடுதீவு ஸ்ரீ சித்திவிநாயகர் மகாவித்தியாலய அணி பெற்றது. 

Comments