தடகள போட்டியாளர்களுக்கு சிகிச்சைகள் அளித்த வைத்தியருக்கு வாழ் நாள் தடை | தினகரன் வாரமஞ்சரி

தடகள போட்டியாளர்களுக்கு சிகிச்சைகள் அளித்த வைத்தியருக்கு வாழ் நாள் தடை

ரஷ்யாவைச் சேர்ந்த வைத்தியருக்கு தடகள போட்டிகள் தொடர்பிலான எந்தவொரு செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுகளுக்கான சர்வதேச நீதிமன்றம் குறித்த தீர்ப்பை வைத்தியருக்கெதிராக விதித்துள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த தடகள வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் செர்ஜி போர்துகலோவ் மீது ஊக்கமருந்து அளித்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்கள் தெளிவான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த விளையாட்டுகளுக்கான சர்வதேச நீதிமன்றம், வீரர்களுக்கு ஊக்க மருந்து கொடுத்த வைத்தியர் பொதுப்பணியாற்றுவதற்கு தகுதியற்றவர் என தெரிவித்துள்ளது. 

Comments