மதிக்கப்பட வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

மதிக்கப்பட வேண்டும்

உயன்வத்த மன்த் நௌபல்

மகவை, மகள்

மாணவி, மனைவி

மாதா,மூதாட்டி என்று

மாண்புமிக்க பல

மாறு வேடத்தை ஏற்கும்

மகளிர் இவளுக்கு

மகளிர் தினம் என்று ஒரு நாளாய்?

மாற்றங்கள் மண் கண்டும்

மடமையினால் பெண்- இவளின்

மனதிற்குள் புதைந்திருக்கும ஆசைதனை,

மறைந்திருக்கும் திறமைகளை, மட்டுமல்ல

மறுக்கப்படும் இவள் உரிமைகளை

மண்ணிற்கு மலரவைக்க

மகளிர் தினம் என்று ஒருநாள் போதாது!!

மாறாக மலரும் ஒவ்வொரு நாளும்

மகளிர் இவளுக்கு

மகளிர் தினமாக

மதிக்க வேண்டும்! 

Comments