பாகுபலி 2-இல் தமன்னாவுடன் போட்டியா? - | தினகரன் வாரமஞ்சரி

பாகுபலி 2-இல் தமன்னாவுடன் போட்டியா? -

இந்த சந்திப்பில் அனுஷ்கா பேசுகையில், 'பாகுபலி படத்தின் முதல் பாகத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்ததால் அதன் இரண்டாம் பாகம் பெரும் எதிர்ப்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. முதல் பகுதியில் தமன்னாவுக்கு அதிக காட்சிகளும், எனக்கு குறைவான காட்சிகளும் இருந்தன. இரண்டாம் பாகத்தில் நான் அதிக காட்சிகளில் வருகிறேன். தமன்னாவும் எனக்கு இணையான காட்சிகளில் வருகிறார். இந்த படத்தின் இரண்டு பாகங்களுக்காகவும் நடிகர்- நடிகைகளும், தொழில்நுட்ப கலைஞர்களும் கடுமையாக உழைத்து இருக்கிறோம். ‘பாகுபலி-2' படத்தில் நான் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து இருக்கிறேன்.

இதற்காக சண்டை பயிற்சியாளர்கள் வைத்து பல மாதங்கள் சண்டை கற்றேன். வாள் சண்டை பயிற்சியும் எடுத்தேன். கடும் உடற்பயிற்சிகள் செய்து எடையையும் குறைத்தேன். மருமகள் தமன்னா பாகுபலி படத்தில் நடித்தது பெரிய சவாலாக இருந்தது. பெரும் சவால் என்று கூட சொல்லலாம்.

இந்தப் படத்தில் தமன்னா எனது மருமகளாக நடித்து இருக்கிறார். படப்பிடிப்பில் எனக்கும், தமன்னாவுக்கும் இடையே யாருக்கு முக்கியத்துவம் என்பதில் போட்டி நிலவியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை.

போட்டி மனப்பான்மை எங்களுக்குள் இல்லை. மகிழ்ச்சியாகவே நடித்தோம். கதைதான் முக்கியம் கதைதான் முக்கியம் இரண்டு கதாநாயகிகள் கதையில் நடித்து இருக்கிறீர்களே? என்று கேட்கிறார்கள். என்னை பொறுத்தவரை கதைக்கும் எனது கதாபாத்திரத்துக்கும்தான் முக்கியத்துவம் கொடுப்பேன். நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் நடிக்க சம்மதிப்பேன்.

Comments