சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்தால் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது | தினகரன் வாரமஞ்சரி

சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்தால் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது

சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த நபர் ஒருவருக்ெகதிராக கலால் வரி சட்டத்தின்கீழ் வழக்குத் தாக்கல் செய்ய முடியாதென களுத்துறை நீதவான் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்ெகதிராக மேன்முறையீடு செய்ய பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். இதே​வேளை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தற்போதைக்கு களுத்துறை மாவட்டத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் இது நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு பொருந்தமாட்டாது என்றும் அவர் கூறினார்.

மேன்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு கிடைத்ததும் அதற்கமைய அடுத்தக்கட்ட நடவடிக்ைககளை பொலிஸ் திணைக்களம் மேற்கொள்ளும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

எனினும் சட்டவிரோத மதுபானம் வைத்திருக்கும் நபர் ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வது தொடர்பில் பொலிஸ் மற்றும் கலால் அதிகாரிகளுக்கிடையே இருக்கும் சட்டச்சிக்கல் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக பொலிஸ் திணைக்களம் விரைவில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2011 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு களுத்துறை மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைவாக களுத்துறை நீதிமன்ற அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்களில் கலால் வரி சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஒரு வழக்ைக விசாரணை செய்யாமல் நீதிமன்றம் கிடப்பில் போட்டிருந்தது.

இதனையடுத்து பொலிஸார் மனுத்தாக்கல் செய்து குறித்த வழக்ைக விசாரணை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தைக் கோரியிருந்தனர். அப்போது வழக்ைக பரிசீலித்த நீதவான் நீதிமன்றின் நீதவான் அந்த வழக்கு தள்ளுபடி செய்து தீர்ப்பளித்ததுடன், இனி அவ்வாறு வழக்குத் தாக்கல் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்.

 

Comments