இலங்கையின் மாணவர்களுக்கு புதிய கற்கைகளை அறிமுகம் செய்யும் அவுஸ்திரேலியாவின் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையின் மாணவர்களுக்கு புதிய கற்கைகளை அறிமுகம் செய்யும் அவுஸ்திரேலியாவின்

இலங்கை/நேபாள/இந்திய மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் வகையில், அவுஸ்திரேலியாவின் La Trobe பல்கலைக்கழகத்தின் La Trobe Business School இன் தலைமை அதிகாரி பேராசிரியர் போல் மாதரின் தலைமைத்துவத்தின் கீழ் தூதுக்குழுவினர் கொழும்பு, காத்மண்டு, மற்றும் இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

சார்க் நாடுகள் மற்றும் இலங்கை ஆகிய பிரதேசங்களின் மாணவர்களிடமிருந்து கிடைத்திருந்த வரவேற்பைத் தொடர்ந்து, La Trobe Business School இனால் புதிய ஆட்சேர்ப்பு செயற்பாடுகள் நவம்பர் மாதத்தில் ஆரம்பமாகவுள்ளன. பெப்ரவரி மற்றும் ஜுலை மாதத்தில் இரு செமிஸ்டர்கள் ஆரம்பமாகவுள்ளன.

La Trobe Business School சில ஆண்டுகளுக்கு முன்னதாக அதன் பட்டப்பின்படிப்பு கற்கைகளுக்கு மூன்றாவது செமிஸ்டரை அறிமுகம் செய்திருந்தது. இந்த கற்கை தற்போது இலங்கை மாணவர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றுள்ளது.

மேலும், துறையின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய கற்கைகளும் ஆரம்பமாகியுள்ளன.

உலக பல்கலைக்கழகங்களில் கல்வியியல் தரப்படுத்தலில் சுமார் 200 இடங்களை La Trobe University பல்கலைக்கழகம் கடந்து முன்னேறியிருந்தது. உலகளாவிய ரீதியில் காணப்படும் பல்கலைக்கழகங்களில் 336ஆம் நிலையில் காணப்படுகிறது. உலகளாவிய ரீதியில் தரப்படுத்தல்களை வழங்கும் மூன்று அமைப்புகளின் தரப்படுத்தல்களில் 400 நிலைகளுக்குள் இந்த பல்கலைக்கழகம் அமைந்துள்ளதாக பேராசிரியர் போல் மாதர் குறிப்பிட்டார்.

புதிய புலமைப்பரிசில்கள்

அறிவிப்பு

2017ல் ஆரம்பமாகவும் அவுஸ்திரேலியாவின் La Trobe Business School இனால் முன்னெடுக்கப்படும் கற்கைகளுக்கு மொத்த கற்கைநெறி கட்டணத்தில் 15%, 20% மற்றும் 25% புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன. இந்த புலமைப்பரிசில்கள் மாணவர்களின் திறமைகள் அடிப்படையிலும், முன்னுரிமை அடிப்படையிலும் வழங்கப்படும். 

Comments