
அண்மையில் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்ற 2017 ஆம் ஆண்டிற்கான கட்டிட திட்ட விவரவியலாளர்களின் மாநாட்டுக்கான பிரதான அனுசரணையாளர்களுள் ஒன்றாக JAT Holdings நிறுவனம் திகழ்ந்தது.
இம்மாநாடானது, திட்ட விவரங்கள் மற்றும் அவற்றின் அமுலாக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்த கலந்துரையாடலுக்கு கட்டிடக்கலைஞர்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒரு தளத்தை வழங்கியது. இலங்கையில் தரமான கட்டிடங்களை உறுதி செய்வதற்கு சரியான திட்ட விவரங்களின் தேவை குறித்து திட்ட விவரவியலாளர்கள் உள்ளடங்களான சகல நிபுணர்களினதும் கருத்துக்களை கண்டறிவதே இக்கருத்தரங்கின் நோக்கமாக அமைந்து இருந்தது.
இம்மாநாட்டின் பிரதான நோக்காமானது - திட்டவரைபுகள் என்றால் என்ன, ஏன் அவை முக்கியமானது, பலதரப்பட்ட திட்ட வரைபுகள் உள்ளனவா, திட்டவரைபுகளை யார் எழுத வேண்டும், திட்ட வரைபில் என்ன பிழைகள் ஏற்படலாம், கட்டிட நிர்மாணம் மற்றும் பெறுமதி சேர்ப்பு ஆகியவற்றில் சர்வதேச தரத்தை அடைவதற்கு திட்ட வரைபு மற்றும் மதிப்பீடு, கட்டிட நிர்மாணத்திற்கு திட்ட வரைபு எழுதுதல், கட்டிட நிர்மாணத்தில் திட்டவரைபின் முக்கியத்துவம், பிழையான திட்ட வரைபுகளினால் திட்ட முகாமைத்துவத்தில் சந்திக்கப்பட்ட பின்னடைவுகள், திட்டவரைபில் தொழில்நுட்பத்தின் வரைபு, திட்டவரைபு ஒருங்கிணைப்பு, வழிகாட்டல் மற்றும் செயற்படுத்தல் நடைமுறைகள், சர்வதேச ரீதியில் காணப்படும் திட்ட வரைபுகளின் வகைகள் ஆகியனவாக இருந்தது.
பல முக்கிய பேச்சாளர்களை உள்ளடக்கிய இம்மாநாட்டில் கட்டிட வடிவமைப்பாளர்கள், பொறியிலாளர்கள், திட்ட முகாமையாளர்கள், தொகை அளவையாளர்கள், கட்டுநர்கள், அபிவிருத்தியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் பெறுமதியான தகவல்களை பரிமாறிக்கொண்டனர்.
JAT ஹோல்டிங்சின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் சுரனி சஹபந்து மற்றும் பொது முகாமையாளர் (தொழிற்சாலை) சரித் பெரமுனே ”மேற்பூச்சை தெரிவு செய்வதில் திட்ட வரைபின் முக்கியத்துவம்” எனும் தொனிப்பொருளில் உரையாற்றினர்.