துரித கதியில் கூரியர் சேவைகள்: | தினகரன் வாரமஞ்சரி

துரித கதியில் கூரியர் சேவைகள்:

இலங்கையிலும் மாலைதீவுகளிலும் 35 வருடங்களுக்கு மேலாக சர்வதேச துரித வலையமைப்பைக் கொண்டுள்ள எயிட்கன் ஸ்பென்ஸ் குழுமம், ஐரோப்பாவின் இரண்டாவது மாபெரும் பொதிகள் விநியோக சேவை வலையமைப்பைக் கொண்ட DPDகுழுமத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

பிரான்ஸிலுள்ள Le Groupe La Poste ன் துணை அமைப்பான Geopost SA ன் சர்வதேச விநியோக வலையமைப்பாக DPD குழுமம் திகழ்கிறது. இந்நிறுவனத்தினுௗடாக உலகின் 230 நாடுகளுக்கு விநியோக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

DPD குழுமம் இந்தியாவின் மாபெரும் மற்றும் அதிகளவு விரும்பப்படும் துரித வலையமைப்பான DTDC Express உடன் கொள்கை உடன்படிக்கையை கொண்டுள்ளது. இதில் 42 சதவீத உரிமையாண்மையை கொண்டுள்ளது. இந்த புதிய பங்காண்மையினுௗடாக, இலங்கையிலும் மாலைதீவுகளிலும் இந்தவேகமான உயர் தரச் சேவை தற்போது கிடைக்கின்றது.

எயிட்கன் ஸ்பென்ஸ் குழுமம் கொண்டுள்ள பரந்தளவு அனுபவம், நிபுணத்துவம், தங்கியிருக்கும் தன்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியன துறையில் 35 வருடங்களுக்கு மேலாக இயங்குகின்றமை போன்றன இந்த பங்காண்மைக்கு இயற்கையான காரணிகளாக அமைந்திருந்தன.

எயிட்கன் ஸ்பென்ஸ் பிஎல்சியின் துணை நிறுவனமான குளோபல் பார்சல் டிலிவரி பிரைவட் லிமிட்டெட், இலங்கையில் DPD குழுமம் மற்றும் DTDC Express ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும்.

தமது அனுபவத்தையும், குழுமம் மற்றும் DTDC Express ஆகியவற்றின் சிறந்த இயலுமைகளையும் ஒன்றிணைத்து இலங்கை மற்றும் மாலைதீவுகளின் வாடிக்கையாளர்களுக்கு நவீன உயர் தர துரிதவிநியோக சேவைகளைபெற்றுக் கொடுக்கும்.

DPD குழுமம் புத்தாக்கமான தொழில்நுட்பங்களையும், உள்நாட்டு நிபுணத்துவத்தையும் பயன்படுத்தி எளிமையான, நெகிழ்ச்சியான சேவைகளை அனுப்புனர்களுக்கும், பெறுநர்களுக்கும் வழங்கிவருகிறது. அதன் எதிர்வுகூறல் சேவைஊடாக, DPD குழுமத்தினால் புதியசேவை நியமங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு விநியோக செயன்முறைதொடர்பில் தெளிவான விளக்கங்கள் வழங்கப்படுகின்றன 

Comments