மனசு | தினகரன் வாரமஞ்சரி

மனசு

னசு அன்பில் தாயாயும்

தாங்கு திறனில் தந்தையாயும்

விசாலித்திருந்தால்

வாழ்வே வசந்தம் தான்!

மனசு ரகசியங்களின்

களஞ்சியசாலை

ஏக்கங்களின்

புதைகுழி!

மனசு முடிவிலிச்

சிந்தனைகளை

உற்பவிக்கும்

சிந்தனாவாதி

மனசு பரப்பில்

பிரமாண்டமான

உயிரோட்டமான

இணையத் தளம்!

மனசு விசுவரூபமாயும்

வாமனமாயும் எம்

ஆளுமையின் வீச்சை

பிரதிபலிக்கும் !

மனசு எஃகானால்

‘இரும்பு மனிதர்’ என்பர்

மனசு கனிந்து போனால்

‘கோழை’ என்பர்! 

Comments