எண்ணெய்க்குதம் | தினகரன் வாரமஞ்சரி

எண்ணெய்க்குதம்

எரிபொருள் நெருக்கடி உண்மை என்ன?

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. இரவு பன்னிரண்டு மணியிலிருந்து பெற்றோல், டீசல் கிடைக்காதாம்! உடனே வாகனத்தைக் ெகாண்டுபோய் தேவையான அளவு நிரப்பிக்ெகாள்ளுங்கள். காலையில் தடுமாற வேண்டாம்! அப்படியே நடந்தது.

திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்களை மன்னிக்கவும் குதாங்களை (எல்லோரும் அப்படித்தான் எழுதுகிறார்கள். முன்னையது தங்க பிஸ்கட்டை மறைத்துக்ெகாண்டுபோகப் பயன்படுவது. பின்னதுதான் எண்ணெய்யைக் களஞ்சியப்படுத்த பயன்படும் குதாம்) இந்தியாவுக்குக் கொடுப்பதற்குப் பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் கடும் எதிர்ப்பாம். அதனால், எரிபொருள் விநியோகத்தை முடக்கி எதிர்ப்பை வெளிப்படுத்தும் போராட்டம்.

போராட்டக்காரர்களின் கோ ரிக்கைக்கு வலுவிருக்கிறதோ இல்லையோ, முடக்கத்திற்கு இருக்க வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், திங்கட்கிழமை காலையில் அப்படி எந்த முடக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவுடன் உடன்படிக்ைக இருக்காது என்று பிரதமர் உறுதியளித்ததையடுத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை முடக்கிக்ெகாண்டன வழக்கம்போல.

உலகில் பல நாடுகள் செல்வச் செழிப்புடன் வளர்ச்சியடையவும் வீழ்ச்சியடையவும் எண்ணெய் வளமே முக்கிய காரணம். எண்ணெய் வளத்தை அடிப்படையாகக் கொண்டே பல நாடுகளில் யுத்தங்கள், ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. 1970களில் ஏற்பட்ட இஸ்ரேல் அரபு யுத்தத்தின் போதே உலக நாடுகள் எண்ணெய் வளம் மீது கூடுதல் அக்கறைகொண்டன. அதில் இலங்கையும் விதிவிலக்கன்று.

எண்ணெய் வளம் இருந்தால், ஏனைய நாடுகளைப்போன்று நாமும் முன்னேறிவிடலாம் என்ற நம்பிக்ைகயில் அப்போதைய பிரதமர் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, எண்ணெய் வள ஆய்வுக்கான பொறுப்பை ரஷ்யாவிடம் ஒப்படைத்திருந்தார். மன்னாரின் காவிரி ஆற்றுப்படுகையில் எண்ணெய் வளம் இருக்கிறது என்ற கனவு அப்போது ஆரம்பித்ததுதான். அந்தக் கனவைப் பற்றிய செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் இதோ இலங்கையில் பெற்றோல் கிடைத்துவிட்டது என்ற பாணியில் செய்திகளை வெளியிட்டன. சிறிது நாளில், அஃது ஏதோ இரகசிய பணியாக இருக்கும் என்று நினைத்து மக்களும் அமைதியாக இருந்துவிட்டார்கள். ஆனால், கட்சி அரசியல் நிற்கவில்லை.

சிறிமாவோ அரசாங்கம் முறையான நடவடிக்ைகயை எடுக்கவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியது. பின்னர் சிறிமா அவர்கள் எண்ணெய் அகழ்வாராய்ச்சிப் பணியை பிரெஞ்ச் நிறுவனமொன்றுக்குக் கொடுத்தார். அவர்களும் அதில் தோற்றுப்போயினர்.

நிலக்கீழ் பாறைகளில் ஏற்படுகின்ற இரசாயன மாற்றத்தின் காரணமாக மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர் எண்ணெய் உற்பத்தியாகின்றது. இதனைக் கண்டறிவதற்கான முயற்சிக்குப் பல பில்லியன் கணக்கான டொலர் செலவாகுவதுடன், ஏழு முதல் இருபது வருடகால அவகாசம் தேவை. எனினும், இந்த முயற்சியை 1977இல் பதவிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சியும் சளைக்காது முயற்சித்துப் பார்த்தது. மன்னார் காவிரிப் படுகை முதல் முல்லைத்தீவு நெற்களஞ்சியம் வரை எண்ணெய் வளம் இருக்கலாம் என்று உள்ளூர் விஞ்ஞானிகள் அபிப்பிராயம் தெரிவித்திருந்தனர். இதனால், தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியிலும் எண்ணெய் வளம் இருக்கிறது என்று அப்போது புலிகள் இயக்கமும் நம்பிக் கொண்டிருந்திருக்கக்கூடும்.

அவ்வாறான ஒரு சூழ்நிலையில் இலங்கையில் சமாதான முன்னெடுப்புக்கு அனுசரணை வழங்கிய நோர்வே அரசு மன்னாரில் எண்ணெய் அகழ்வு ஆராய்ச்சியில் ஈடுபட்டதையும் மறந்துவிடுவதற்கில்லை.

சமாதானம் உருவாகிறதோ இல்லையோ, கருப்புத் தங்கத்தைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்பது அப்போது நோர்வேயின் குறிக்ேகாளாக இருந்தது என்ற விமர்சனமும் எழுந்தது. இதன் பின்னர் விழித்துக்ெகாண்ட இந்திய அரசு, காவிரிப் படுகையில் அகழ்வை மேற்கொண்டு எரிவாயுவைக் கண்டுபிடித்து வெற்றி கண்டது! புலிகள் இயக்கமும் முடிந்து போனது. ஆனால், இலங்கையின் கனவு இன்னமும் நனவாகவில்லை. இந்நிலையில் இந்தியாவைத் தவிர்த்து இலங்கையில் எரிபொருள் நடவடிக்ைகயை மேற்கொள்ள முடியுமா என்பது யாவருக்கும் புரியும்.

உலக நிலவரப்படி தற்போது இந்தியா, சீனா, ரஷ்யா, பிறேசில், கொரியா ஆகிய நாடுகளின் சுமார் முன்னூறு கோடி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே எரிபொருள் கோரிக்ைக கூடுதலாக உள்ளது. அந்த நாடுகளில் உள்ள மத்தியதர வர்க்கத்தினரின் வாழ்வாதாரத்திற்கு ஏற்ற விதத்தில்; நவீன தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாட்டுக்குத் தேவையான மின்வலுவைப் பெற்றுக்ெகாடுக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்வதற்கு அந்த நாடுகள் தயாராக இருக்கின்றன.

தற்போது ஒபெக் நாடுகள் அடங்கலாக மசகு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் நாளாந்தம் 96 மில்லியன் பீப்பாய்களை உற்பத்தி செய்கின்றன. நான்கு பீப்பாய்கள் நுகரப்படும்போது ஒரு பீப்பாய் உற்பத்தியாகின்றது. அதேநேரம், இந்த 96 மில்லியன் பீப்பாய் உற்பத்தி எதிர்வரும் 20, முப்பது ஆண்டுகளில் அரைவாசியாகக் குறையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதேநேரம், தற்போது சுமார் ஐம்பது அமெரிக்கன் டொலராக உள்ள மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்னும் சில ஆண்டுகளில் 120 டொலராக உயரும் எனவும் மதிப்பிடப்படுகிறது. இந்த நிலைமைக்கு முகங்கொடுப்பதற்குத்தான் உலக நாடுகள் பகீரதப்பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், நமது நாட்டில் விடயங்களை ஆய்ந்தறிந்து கொள்வதைவிடவும் எடுத்த எடுப்பில் எதிர்ப்புகளை வெளியிடுவதற்கே பழகிக்ெகாண்டிருக்கிறோம்.

நாளாந்தம் உற்பத்தியாகும் எரிபொருளில் 65% போக்குவரத்திற்கே பயன்படுத்தப்படுகின்றது. இந்த நிலையில் எரிபொருள் விநியோகம் தடைப்படுமாயின் நாட்டின் செயற்பாடு ஸ்தம்பிக்கும் என்பதைப் புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை.

எண்ணெய் உற்பத்தியினால் உலகில் தங்களை மூன்றாம் உலக பணக்காரர் பட்டியலில் உள்வாங்கியது மத்திய கிழக்கு நாடுகள். இந்த எண்ணெய் உற்பத்தி நாடுகளினால் அமெரிக்க, ஐரோப்பிய, ரஷ்யா நாடுகளிக்கிடையே ஒரு போட்டி நிலை உருவாகியது.

இன்றைய உலகில் பொருளாதாரத்தில் ஸ்திரத்தையும் தளர்வையும் ஏற்படுத்துவது மசகு எண்ணெய் விலையாகும். அமெரிக்க ஈராக் மீது போர் தொடுக்க முக்கிய காரணமாக விளங்கியது எண்ணெய் விவகாரமே. எண்ணெய் விநியோகம் சீராக இல்லாவிடின் உலகமே அஸ்தமிக்கும் நிலை உருவாகும் என்பது போல கடந்த திங்களன்று பெற்றோலிய விநியோக தொழிற்சங்க நடவடிக்கையால் எரிபொருள் விநியோகம் தடைபட்டதுமே பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக வீதிகளில் வரிசையாக நிற்பதை காணக்கூடியதாக இருந்தது. இது ஒரு நாளில் முடிவுற்றாலும் சர்வதேச ரீதியில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் உருவாகும் நிலை என்ன?

உலக ரீதியாக திருகோணமலை துறைமுகம் முக்கியத்துவம் பெற்றாலும் அதன் அருகிலுள்ள எண்ணெய்த் தாங்கிகள் மீது மேற்கத்திய கிழக்கத்திய நாடுகளின் கண்கள் பதியப்பட்டுள்ளன. இந்த எண்ணெய்த் தாங்கிகளை குறிவைத்தே சில நாடுகள் கால் பாதிக்க முயற்சிக்கின்றன என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. அதில் உண்மை இல்லாமல் இல்லை.

இந்தியாவிற்கு மிக அருகில் இருப்பதினால் இந்தியாவும் இந்த எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிற்கு எதிரான நாடுகளின் கைகளுக்கு போகக் கூடாதென்ற ரீதியில் காய்கள் நகர்த்தப்படுகின்றன.

திருகோணமலையின் எண்ணெய் தாங்கிகள் இலங்கையில் ஆட்சிசெய்த பிரித்தானியரால் நிர்மாணிக்கப்பட்டது. பிரித்தானியர் தூரநோக்குடனும், எண்ணெயை சேமித்து மிக நெருக்கடியான சூழ்நிலையில் பயன்படுத்துவதற்கும் இந்த எண்ணெய் தாங்கிகள் திருமலை துறைமுகத்தை சார்ந்தும் வனப்பகுதியைச் சார்ந்தும் 850 ஏக்கர் பரப்பளவில் மிக இரகசியமாக பாதுகாப்பான சூழலில் 101 எண்ணெய் சேமிப்பு தாங்கிகள் நிர்மாணிக்கப்பட்டது என்றால் ஆச்சரியமானது.

இலங்கை சுதந்திரத்திற்குப் பின்னர் அரசால் எண்ணெய் தாங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதன் பின்னர் இத்தாங்கிகளின் பாதுகாப்பு, பராமரிப்பு குறைவாகவே காணப்பட்டது. உலகின் இரண்டாவது இயற்கை துறைமுகமான திருகோணமலை துறைமுகமானது, இலங்கை ஆட்சி செய்த பிரித்தானியரால் முதலாம் உலக போருக்குப் பின்னர் கிழக்காசியாவின் முதன்மை கேந்திர நிலையமாக மாற்றப்பட்டது. பிரித்தானியர் 1924 ஆம் ஆண்டில் எண்ணெய் சேமிப்பு திட்டத்தை ஆரம்பித்தனர்.

1930 இல் இக்குதங்களை ஓர் அங்குல தடிமனான இரும்பு தகட்டால் நிர்மாணிக்கப்பட்ட 101 சேமிப்பு தாங்கிகளுடன் துறைமுகத்திற்கு அருகிலுள்ள தாங்கிகள் ஓர் அடி கொங்கிறீட் மேடைகள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த எண்ணெய் தாங்கி நிர்மாணிப்பு வேலைக்காக பிரிட்டிஷார் ஆபிரிக்க குடியேற்ற நாடுகளிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வந்துள்ளனர். இங்கு 102 எண்ணெய் தாங்கிகள் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டன. ஆனால் 100வது தொட்டியின் தளம் அழிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. 2002 ஆம் ஆண்டு இந்திய எண்ணெய் நிறுவனமான IOCக்கு வழங்கப்படும் வரை, கடலுக்கு அருகிலுள்ள 15 தாங்கிகள் மட்டுமே பயன்படுத்தியது. IOC கூட இந்த தாங்கிகளை மட்டுமே பயன்படுத்தியது. ஏனைய எண்ணெய் தாங்கிகள் காடு சார்ந்த பகுதிகளில் காணப்பட்டன. உலகில் திருகோணமலை துறைமுகமானது 2 வது உலகப் போரின்போது தென் பிராந்தியத்தைச் சேர்ந்த நேசசக்திகளின் முக்கிய தளமாகவும் விளங்கியது.

இப்பகுதியில் கடற்படைக் கப்பல்களில் பெரும்பாலானவர்களுக்கு எரிபொருள் நிரப்பு வசதி வழங்கிய எண்ணெய் தாங்கிகள் ஜப்பானியர்களின் முக்கிய இலக்காக இருந்தது. 1942.04.09 ஆம் திகதி அதிகாலை ஜப்பானின் குண்டுவீச்சில் 91 ஆம் இலக்க தாங்கி அழிக்கப்பட்டது. ஆனாலும் ஜப்பானியர் வெற்றிக் கொள்ளவில்லை.

இந்த எண்ணெய் தாய்கியும் 12,000 தொன் எண்ணெய்யை சேமித்து வைத்திருக்க முடியும். அத்துடன் 1.2 மில்லியன் தொன் அளவுக்கு எண்ணெய்யை சேமித்து வைக்கக் கூடிய திறன் கொண்டது. ஒரு தொன் என்பது 1018.32 லீட்டராகும். ஓர் எண்ணெய் தாங்கியின் கொள்ளவு சுமார் 1,22,19,840 லீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது நாட்டைப் பொறுத்த வரையிலும் எண்ணெய் விவகாரம் மக்கள் அறியாத விடயமாகவும், அரசு கொள்ளை இலாபமீட்டும் பொருளாகவும் விளங்குகிறது. மஹிந்த ஆட்சியிறுதியில் 150 ரூபாவாக காணப்பட்ட பெற்றோல் விலை நல்லாட்சியோடு 100 ரூபாவுக்குள் கொண்டு வரப்பட்டது. அதன் பின்பே எண்ணெயில் அதிக வருமானத்தை அரசு ஈட்டியுள்ளது என்பதை மக்களும் அறிந்தனர்.

மசகு எண்ணெய் ஒரு பெரல் சுமார் 44 முதல் 46 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது. ஒரு டொலர் 149 ரூபாவாகும். ஒரு பெரல் (USA) 158.98 லீட்டராகும். ஒரு பெரல் மசகு எண்ணெயிலிருந்து 73 லீட்டர் பெற்றோலும், 36 லீட்டர் டீசலும், 20 லீட்டர் ஜெட் விமான எரிபொருளும் மற்றும் 6 லீட்டர் ஏனைய பொருட்களும் தயாரிக்கப்படுகிறது. இதன்படி மசகு எண்ணெய் வியாபாரம் பணம்கொழிக்கும் தன்மையுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இலங்கையில் எரிபொருள் வழங்கும் நிறுவனங்களாக CEYPETCO மற்றும் IOC என்ற இரு நிறுவனங்களும் இயங்குகின்றன.

திருகோணமலையில் 14 எண்ணெய் தாங்கிகள் இந்திய நிறுவனம் குத்தகைக்கும் மற்றும் 10 எண்ணெய் தாங்கிகள் இலங்கையும் பயன்படுத்துகின்றன. மீதமுள்ள 74 எண்ணெய் தாங்கிகள் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தமே கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் இதன் (21 ஆம் பக்கம் பார்க்க)

முழு உரித்துரிமையும் இந்திய நிறுவனத்திற்கு வழங்க போவதில்லை என அரச தொழில் முயற்சிகள் அமைச்சர் கபீர் ஹாஷிம் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், இலங்கையில் ஹம்பாந்தோட்டை துறைமுகம், விமான நிலையம் அத்துடன் கொழும்பு மேற்கு அபிவிருத்தி சீனா அரசின் உதவியுடன் அரசு முன்னெடுத்தது போல் திருமலை துறைமுக அபிவிருத்தியை இந்திய அரசின் உதவியுடன் முன்னெடுப்பதற்கு சிறந்த தருணமாக அமைந்துள்ளது. அத்துடன் வடக்கு, கிழக்கின் பிரதான அபிவிருத்தியின் பிரதான பங்காளராகவும் இந்தியா விளங்கிவருகின்றது குறிப்பிடத்தக்கது.

கடந்த 28 ஆம் திகதி திருகோணமலையில் அனைத்து எண்ணெய் தாங்கிகளையும் இந்தியாவிற்கு விற்பதற்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு நாம் முழுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றோம். இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் விளைவுகள் விபரீதமாவதுடன், நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளோம். நாம் வேலை நிறுத்தத்தை முன்னெடுத்தால் நாடு பாரிய பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும்.

நாம் அரசுக்கு எதிராக ஒன்றிணையவில்லை, மக்கள் சொத்துக்களை பாதுகாப்பதற்கே ஒன்றிணைகின்றோம். இலங்கையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு விற்பதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று கனிய எண்ணெய் தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

திருகோணமலை எண்ணெய் குதத்தை இந்தியாவுக்கு வழங்குவது உள்ளிட்ட ஒருசில விடயங்கள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தே பெற்றோலிய தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் கடந்த 24 ஆம் திகதி அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்டு வந்த நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம், அதே தினம் பிற்பகல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையை அடுத்தே வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது.

இந்த எண்ணெய் தாங்கிகள் கவனிப்பாரற்று பாயனின்றி இருந்தால் நாளடைவில் காட்டுப் பிரதேசத்திலுள்ளவைகளை காடு விழுங்கிவிடும். அதாவது எண்ணெய் தாங்கிகளிலுள்ள இரும்புகள் துருப்பிடித்து யாருக்கும் பயனிற்றி மாறிவிடும். யாருக்கும் பயன்படுத்தா வண்ணம் வயிக்கோல் பட்டறை நாய் போன்று குரைப்பதால் பயனில்லை. இக்குதங்கள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பயன்தரும் விதத்தில் பயன்படுத்தும் போது எதிர்காலத்தில் எண்ணெய்க்கு தட்டுப்பாடில்லாமல் எந்த சூழ்நிலையிலும் எண்ணெய்யை கையிருப்பில் வைத்திருக்க கூடிய சூழ்நிலை உருவாகும் என்பது ஐயமில்லை.

ஆனாலும் நாட்டின் நலன்கருத்தியும், கடல் பாதுகாப்பு, சுதந்திரமான கப்பல் போக்குவரத்து, பிராந்திய அபிவிருத்தி திருமலை துறைமுக அபிவிருத்தியின் போது, திருமலை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கூட்டு அபிவிருத்தி, எண்ணெய் தாங்கிகள் பராமரிப்பு அபிவிருத்தி செய்தல் உட்பட பல அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கடந்த 27 ஆம் திகதி இந்தியாவுடன் ஒப்பந்தத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

Comments