கல்பனா சாவ்லாவாக | தினகரன் வாரமஞ்சரி

கல்பனா சாவ்லாவாக

ந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாற்றை பாலிவுட் இயக்குநர் பிரியா மிஷ்ரா படமாக எடுக்கமுடிவு செய்திருக்கிறார். அதற்கான கதையையும் எழுதி முடித்துள்ளார். இதுகுறித்து பிரியா மிஷ்ரா கூறும்போது,

கடந்த ஏழு வருடங்களாக கல்பனா சாவ்லாவின் வாழ்க்கையை பற்றிய கதையை எடுக்க முயற்சி செய்து வருகிறேன். தற்போது தான் அதற்கான நேரம் வந்துள்ளது. இப்படத்தை உலக தரத்தில் பிரம்மாண்டமாக எடுக்க உள்ளதாக கூறினார். மேலும் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும்கல்பனா சாவ்லா கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும்பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளதாகவும் கூறினார். இதற்கு முன்னதாக பிரியங்கா, பிரபல குத்துச்சண்டை வீராங்கனையான 'மேரி கோம்’ வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் மேரி கோமாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது பிரியங்கா நடிப்பில் ஹாலிவுட்டில் தயாராகி உள்ள 'பே வாட்ச்’ படம் விரைவில் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Comments