நடிகைகளுக்கு உடல் அமைப்பு முக்கியம் : | தினகரன் வாரமஞ்சரி

நடிகைகளுக்கு உடல் அமைப்பு முக்கியம் :

ர்யாவுடன் கேத்தரின் தெரசா நடித்து வெளியாகி உள்ள ‘கடம்பன்’ படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. இதுகுறித்து கேத்தரின் தெரசா கூறுகிறார்.

“தமிழ், தெலுங்கில் எத்தனையோ படங்கள் நடித்துவிட்டேன். கடம்பன் மாதிரி ஒரு படத்தில் நடித்தது இல்லை. இந்த மாதிரி கஷ்டப்பட்டதும் இல்லை. சில நாட்கள் நடித்த எனக்கே இவ்வளவு பிரச்சினை. ஆனால் நிஜவாழ்க்கையில் மலையில் காட்டில் வாழும் பெண்களை நினைத்து பார்த்தேன். அவர்கள் எவ்வளவு மன உறுதி மிக்கவர்கள், அவர்களுக்கு என் சல்யூட்.

ஆர்யாவுடன் நடித்தது நல்ல அனுபவம். ஆர்யா ஸ்வீட் பெர்சன். படப்பிடிப்பு தளத்தில் அவரும் உயிரை கொடுத்து வேலை செய்து இருக்கிறார்.

அடுத்து விஷ்ணுவுடன் ‘கதாநாயகன்’ படத்தில் நடிக்கிறேன். என்னுடன் நடித்த பல நடிகர்கள் என்னை பாராட்டியிருக்கிறார்கள். 

Comments