குமார் சங்கக்கார | தினகரன் வாரமஞ்சரி

குமார் சங்கக்கார

லங்கையில் உருவான சிறந்த துடுப்பாட்ட வீரரான குமார் சங்கக்கார கிரிக்கெட் உலகிலிருந்து விடைபெற்றாலும் தொடர்தும் அவரின் பெயர் சர்வதேச விளையாட்டு உலகில் பேசப்பட்டே வருகின்றது. எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் எட்டு நாடுகளின் சார்பில் கூட்டு முகாமையாளர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அண்மையில் நியமித்தது. அதற்கு இலங்கை சார்பாக குமார் சங்கக்கார தெரிவாகியுள்ளார்.

குமார் சங்கக்கார இரு வருடங்களுக்கு முன்பு லோட்ஸில் நடைபெற்ற கொலின் கௌட்ரி சொற்பொழிவின் போதும் சர்வதேச அளவில் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை சார்பாக சங்கக்கார இத்துறைக்குத் தெரிவானதோடு பாகிஸ்தான் சார்பாக ஷஹிட் அப்ரிடி, பங்களாதேஷ் சார்பாக அப்துல் பஷர், இங்கிலாந்தின் இயன்பெல், நியுசிலாந்தின் ஷேன் பொன்ட், அவுஸ்திரேலியாவின் மைக்கல் ஹசி, இந்தியாவின் ஹர்பஜன் சிங், தெரிவு செய்யப்பட்டிருப்பதோடு தென்னாபிரிக்க சார்பாக கிரஹம் ஸ்மித்தும் தெரிவாகியுள்ளார்.

மேலும் 404 ஒருநாள் போட்டிகளில் களம்கண்டுள்ள குமார் சங்கக்கார வரலாற்றில் முதன் முதலாக சர்வதேச வர்ணனையாளராகும் சர்ந்தர்ப்பம் இந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் போது கிடைத்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலினால் இதற்காக உலகின் பல்வோறு நாடுகளைச் சேர்ந்த 15 பேரின் பெயர்களை அறிவித்துள்ளது. இலங்கை சார்பாக குமார் சங்கக்கார தெரிவாகியுள்ளார்.

இந்த வகையில் குமார் சங்கக்காரவோடு தென்னாபிரிக்க வீரர் கிரஹம் ஸ்மித், நியூசிலாந்து முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கலம் முதன் முதலாக சர்வதேச வர்ணனையாளர்களாக களமிறக்கவுள்ளனர். சம்பியன்ஸ் கிண்ண வர்ணனையாளர் குழாமில் குமார் சங்கக்கார புதிதாக இணைத்துக் கொள்ளபபட்டுள்ளதால் இலங்கையின் மற்றொரு வர்ணனையாளரான ரஸல் ஆர்னோல்டுக்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போயுள்ளது.

குமார்சங்கக்கார சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் முதல்தர டுவெண்டி/20 போட்டிகளிலும் இங்கிலாந்தில் நடைபெறும் முதல்தர கவுண்டி போட்டிகளிலும் இன்னும் தனது திறமைகளை வெளிப்படுத்தியே வருகிறார்.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இங்கிலாந்து பிராந்திய கிரிக்கெட் போட்டிகளில் சரே அணி சார்பாகக் களமிறங்கி கடந்த வாரம் தொடர்ந்து இரு சதங்களை விளாசி தான் இன்னும் திறமையாக விளையாடக் கூடியவன் என்று நிரூபித்தே வருகிறார் குமார் சங்கக்கார. அவர் சர்வதேச கிரிக்கெட் உலகில் இருந்து விடைபெற்றாலும், அவரின் சிறந்த பண்புகளாலும், திறமையான விளையாட்டாலும் இன்னும் அவரின் பெயர் சர்வதேச கிரிக்கெட் உலகில் பேசப்பட்டே வருகிறது. 

Comments