நான் இழந்தவை - | தினகரன் வாரமஞ்சரி

நான் இழந்தவை -

நி. லவன்

உலகில் விலைமதிப்பற்ற

உன் கருவறையிலே

நீ ஒளித்து வைத்த

என் பிஞ்சு இதயம்

முதல் முறை நீ நடக்கையில்

கருவறையில் நான் ஆடிய

முதல் ஊஞ்சல்!

நீ முதல் முறை கண்ணீர்

விடுகையில் உன்

கண்ணைத் தொடாத தருணம்!

எனக்காக நீ கவிதை

படிக்கையில் கேட்டிருந்து

மறுபடி உச்சரிக்கத் தெரியாத

என் வார்த்தையைக்

காண்பதற்கு

நீ தீட்டிய கற்பனை ஓவியத்தை

வரைந்த உன் அன்பு

கருவறை சுமந்த உன்னை

கட்டியணைக்காத என் கைகள்

இடையிலே சுமந்த நேரம்

வலி மீட்டிப்பார்க்காத சிந்தை!

என் பசியறிந்து பால்சுரந்தூட்டி

உன் பசியை நினைத்துப்

பார்க்காத நொடிகள்

முத்தமிட்ட உன் அன்பில்

பொய்க்கோபம் செய்த

என் விரல்

இத்தனையும் இழந்தும்

இன்றும் என்னுயிர்

உயில் எழுதுகிறது

அம்மா ஓர் உலகென்று! 

Comments