3 மாதங்களில் படங்களை முடிக்க | தினகரன் வாரமஞ்சரி

3 மாதங்களில் படங்களை முடிக்க

சமந்தா தன்னுடைய திருமணத்திற்காக 3 மாதங்களுக்குள் படங்களை முடிக்க தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் அக்டோபர் 6-ஆம் திகதி திருமணம் நடைபெறுவது உறுதியாகி இருக்கிறது. எனவே செப்டம்பர் மாதத்துக்குள் படங்களை முடித்துக் கொடுக்க சமந்தா திட்டமிட்டுள்ளார்.

சமந்தா தற்போது தமிழில் ‘இரும்புத்திரை’, அநீதி கதைகள் படங்களில் நடித்து வருகிறார். மீதம் உள்ள காட்சிகளை விரைவில் முடித்துக் கொடுக்கிறார். விஜய்யுடன் நடிக்கும் படத்தில் சமந்தா தொடர்பான காட்சிகள் படமாகி வருகின்றன.

அடுத்து சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக பொன்ராம் இயக்கத்தில் சமந்தா நடிக்க இருக்கிறார். மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் ‘வேலைக்காரன்’ படப்பிடிப்பு இன்னும் சில தினங்கள்தான் இருக்கின்றன. சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பில் சமந்தா கலந்து கொள்கிறார்.

இதேபோல் சமந்தா நடிக்கும் அனைத்து படப்பிடிப்பையும் 3 மாதங்களுக்குள் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளார். சிறிது தாமதம் ஆனாலும் செப்டம்பர் மாதத்துக்குள் தனது படப்பிடிப்பு முழுவதையும் முடிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று தான் நடிக்கும் படங்களின் இயக்குனர்களை சமந்தா கேட்டுக் கொண்டுள்ளார். அக்டோபரில் திருமணம் முடிந்த பிறகு 2 மாதம் ஓய்வு எடுக்கிறார். அதன்பிறகு வழக்கம்போல் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். 

Comments