கட்டார் தூதுவர் வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு | தினகரன் வாரமஞ்சரி

கட்டார் தூதுவர் வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு

இலங்கைக்கான கட்டார் தூதுவர் கலாநிதி ராஷித் ஷபீஃ அல்-மர்ரீ, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை இருதரப்பு நல்லுறவுகள் சார்ந்த விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார்.

வளைகுடாவில் நிலவுகின்ற இராஜதந்திர நெருக்கடி எந்த வகையிலும் இரு தரப்பு உறவுகளையோ பொருளாதார நெருக்கடிகளையோ ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றும், கட்டார் தேச மக்களுக்கோ அங்கு தொழில் புரிபவர்களுக்கோ எந்த வகையிலும் பாதிப்புக்களை ஏற்படுத்த கட்டார் அரசு அனுமதிக்க மாட்டாது என்றும் அடிப்படைகளற்ற உண்மைக்கு மாற்றமான பரப்புரைகளால் பிழையாக வழி நடத்தப்பட வேண்டாம் என்றும் கொழும்பிலுள்ள காட்டார் தூதரகம் அறிக்கை யொன்றின் மூலம் இலங்கை வாழ் மக்களை அறிவுறுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சட்டங்கள் மற்றும் மனித உரிமை நியமங்களை மீறி ஒரு சில அண்டை நாடுகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெறாத நிலையில் கட்டாருடனான வழமையான உறவுகளை உலக நாடுகள் வலுப்படுத்தி வருகின்றமையும் கூடிய விரைவில் நெருக்கடி நிலைமைகள் முடிவிற்கு கொண்டுவரப்படுவதற்கான சாதகமான சமிக்ஞைகளை தருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Comments