சேதப்படுத்தப்பட்ட ரூபா நோட்டுகள் டிசம்பர் 31க்குப் பின் செல்லாது | தினகரன் வாரமஞ்சரி

சேதப்படுத்தப்பட்ட ரூபா நோட்டுகள் டிசம்பர் 31க்குப் பின் செல்லாது

சேதப்படுத்தப்பட்ட, மாற்றங்கள் செய்யப்பட்ட அல்லது சிதைக்கப்பட்ட ரூபா நோட்டுகள் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு பின் செல்லுபடியாகாது என மத்திய வங்கி அறிவிக்கிறது.

அவ்வாறான ரூபா நோட்டுக்கள் இருப்பின் டிசம்பர் மாதத்துக்கு முன் வர்த்தக வங்கிகள் ஊடாக மாற்றிக் கொள்ளுமாறும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. நாணயத் தாள்களை சேதப்படுத்தல், அதில் மாற்றம் செய்தல் மற்றும் உருச்சிதைத்தல் 1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் கீழ் குற்றமொன்றாக கருதப்படும். அவ்வாறான செயற்பாடுகள் சிறைதண்டனை, அபராதம் அல்லது இரண்டு விதமான தண்டனைகளையும் ஏற்கவேண்டிய நிலை

தோன்றும் என்றும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அத்தகைய நாணயத் தாள்களை வைத்திருப்பவர்கள் அத்தகைய நாணயத் தாள்களின் முகப்புப் பெறுமதியை இழப்பதன் மூலம் பாதிப்புக்கு உள்ளாக நேரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான செயற்பாடுகளில் இருந்து பொதுமக்களை விலகியிருக்குமாறு ஆலோசனை வழங்கப்படுவதுடன், இலங்கை மத்திய வங்கி, பாதிப்புக்குள்ளான நாணயத்தாள்களை உரிமம் பெற்ற வர்த்தக வங்களினூடாக மாற்றிக் கொள்ளுமாறும் பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர். 

Comments