புத்தளம் எத்தாலை புனித அந்தோனியார் திருவிழா இன்று | தினகரன் வாரமஞ்சரி

புத்தளம் எத்தாலை புனித அந்தோனியார் திருவிழா இன்று

கல்பிட்டி தீபகற்பத்தில் எத்தாலை என்ற அழகிய கிராமத்தில் ஏத்தாலை புனித அந்தோனியாரின் தேவாலயம் அமையப் பெற்றுள்ளது. இத்தேவாலயம் எத்தாலையில் ஓலையினால் வடிவமைத்த சிறுகோயில் ஒன்றும் கேணி செம்புக்குளம் என்ற கிராமத்தில் வேளாங்கண்ணி மாதாவின் சிறிய தேவாலயமும் அமைக்கப்பட்டு, அங்குள்ள கத்தோலிக்க மக்கள் மதவழிபாடுகளில் ஈடுபட்டதாக முன்னோர்கள் கூறுகின்றனர்.

இவ்விரண்டு தேவாலயத்தையும் ஒன்றினைத்து எத்தாலை அந்தோனியார் ஆலயம் அமைத்தாக ஓர் ஐதீகம் உண்டு. 1920 ஆம் ஆண்டு மாசி மாதம் 20 ஆம் திகதி அப்பொழுது தலவில பங்கு குருவானவராக இருந்த வண. பிரான்சிஸ் அடிகளார் தற்போது ஏத்தாலை தேவாலயம் அமைந்திருக்கும் காணிப் பகுதியை அப்பிரதேசத்தில் வசித்த முஸ்லிம் ஒருவரிடமிருந்து ஆயிரம் ரூபா பணத்தில் வாங்கி கொழும்பு அதிமேற்கிராணியரான அன்றனி குதேர் ஆண்டகை பெயருக்கு காணிச் சீட்டு எழுதப்பட்டு 1927 ஆம் ஆண்டு இருந்த பங்கு குருவானவரும் கத்தோலிக்க பொதுமக்களும் இணைந்தே இந்த தேவாலயம் அமைக்கப்பட்டது.

அவ்விடத்தில் றோமன் கத்தோலிக்க பாடசாலை ஒன்றும் 1923 இல் இருந்தது. 1906 இல் கொழும்பு தலைமைப் பீட ஆயர் பதவியினால் நடத்தப்பட்டது. கத்தோலிக்க மக்கள் கணக்கெடுப்பில் புத்தளம் மாவட்டத்திற்குரிய 6,866 குடும்பங்களில் ஏத்தாலையை சேர்ந்த 70 கத்தோலிக்க குடும்பங்கள் இருந்ததாக அமரர் அதிவண. எட்மண் பீரிஸ் சிலாப மறை மாவட்ட ஆயரின் குறிப்பேட்டில் காணப்படுகின்றது. பற்றாக்குறையினால் டொன் ஜோசப் விக்டோரியா என்பவர்களால் கோயிலுக்கு பின்னிருந்த தென்னங் காணியொன்றையும் வழங்கியுள்ளார்.

1927 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இத்தேவாலயக் கட்டடம் 1927 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தேவாலயத்தின் 75 ஆம் ஆண்டு பவள விழா 2005 ஆம் ஆண்டு கோலாகலமாக நடத்தப்பட்டது. ஆரம்ப காலம் தொட்டு தமிழ், சிங்கள தமிழலேயே திருப்பலிகள் நடத்தப்பட்டுள்ளன. 1970க்கு பின்னர் சிங்கள மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இரு மொழிகளிலும் திருப்பலிகள் நடைபெறுகின்றன. இத்தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று 18 ஆம் திகதி நடைபெறுகிறது. 1927இல் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தின் எழில் மிகு தோற்றம் பாலாவிலிருந்து கல்பிட்டி வரை பிரகாசமாக தெரிகிறது. இத்தேவாலயம் கிராமத்துக்கு கிடைத்த பொக்கிஷமாக கருதப்படுகிறது. இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித அந்தோனியாரின் அருளை வேண்டி கலந்து சிறப்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அலோஷயஸ் பிள்ளை

ஏத்தாலை

Comments