இலங்கையில் மேகக்கணிம சேவையை ஊக்குவிக்க கைகோர்க்கும் லங்கா பெல் மற்றும் IBM | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையில் மேகக்கணிம சேவையை ஊக்குவிக்க கைகோர்க்கும் லங்கா பெல் மற்றும் IBM

நிறுவனங்கள், தொழில் ஆரம்பிப்பவர்கள், மென்பொருள் அபிவிருத்தியாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு IBM மேகக்கணிமை ஊடாக மேகக்கணிமை சேவைகளை வழங்க, இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான லங்கா பெல்லுடன் IBM இன்று கைகோர்த்துள்ளது.

ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக, இரு நிறுவனங்களும் இணைந்து IBM மேகக்கணிமையூடாக பணிச்சுமை இடப்பெயர்வு, பேரிடர் மீட்பு மற்றும் கொள்ளளவை விஸ்தரிக்கும் தீர்வுகள் உள்ளடங்களாக பொது, தனியார் மற்றும் கலப்பு மேகக்கணிமைகளை சந்தைப்படுத்தி விற்பனை செய்யவுள்ளன.

IBM உடனான இந்த ஒப்பந்த மூடாக லங்கா பெல்லானது பலதரப்பட்ட மேகக்கணிமை தீர்வுகளை உள்ளடக்கியதாக தனது சேவைகளை விஸ்தரிக்கின்றது. உதாரணமாக, IaaS மற்றும் PaaS சேவைகளுக்கு மேலதிகமாக IBM NAS (வலையமைப்பு அணுகல் சேவை) உடன் இணைக்கக்கூடிய பெக்-அப் சேமிப்பகம், வர்ச்சுவல் இயந்திரம் மற்றும் வர்ச்சுவல் சேமிப்பகம் ஆகியவற்றை லங்கா பெல் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை IBM மேகக்கணிமை உட்ட்கட்டமைப்பு வழிவகுக்கின்றது. ”IBM உடன் எமது 20 வருட உறவின் விஸ்தரிப்பாக இந்த பங்காளித்துவம் காணப்படுவதுடன், இலங்கையிலுள்ள நிறுவன வாடிககையாளர்கள் மேகக்கணிமை வழங்கல்களை இலகுவாகவும் வேகமாகவும் பற்றிக்கொள்ளக்கூடிய எமது நோக்கத்தை இது வெளிப்படுத்துகிறது” என லங்கா பெல்லின் முகாமைத்துவப் பணிப்பாளர் டாக்டர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

IBM இன் சகல மேகக்கணிமை தரவு நிலையங்களும் உலகத்தரம் வாய்ந்த வலையமைப்பு உட்கட்டமைப்பு, வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகியவற்றுடன் சிறப்பான அலைவரிசை மற்றும் இணைப்புடன் இணைக்கப்படுகின்றன. தங்குதடையற்ற தரவுப் பரிமாற்றம், குறைவான செயலற்ற நிலை மற்றும் தொடர்ச்சியான செயற்பாடுகளை மேற்கொள்ள தேவையான உயர் வேகம் மற்றும் நம்பகத்தன்மையை இது வழங்குகின்றது.

”சகல அளவிலுமான நிறுவனங்கள் மற்றும் மென்பொருள் அபிவித்தியாளர்கள் தங்களின் புத்தாக்கமான எண்ணங்களை இலகுவாக தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் வியாபார மாதிரிகளாக மாற்ற உதவும் நெகிழ்வுத்தன்மை மற்றும் செயற்பாடுகளை வழங்கும் திறந்த வடிவமைப்பாக IBM மேகக்கணிமை உள்ளது” என இலங்கை IBM இன் RGM கிறிஷான் பெர்னாண்டோ தெரிவித்தார். 

Comments