சிங்கர் - Huawei இடையிலான வெற்றிகரமான ஐந்தாண்டு பங்குடமை | தினகரன் வாரமஞ்சரி

சிங்கர் - Huawei இடையிலான வெற்றிகரமான ஐந்தாண்டு பங்குடமை

பல்வேறு வர்த்தக நாமங்களின் கீழ் நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்கள் மற்றும் இலங்கையில் முன்னிலை வகிக்கும் ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான Huawei ஆகியவற்றை விற்பனை மற்றும் விநியோகம் செய்வதில் நாட்டில் முன்னிலை வகித்துவருகின்ற நிறுவனமான, சிங்கர் ஸ்ரீ லங்கா பீஎல்சி, Huawei உடன் ஐந்து வருடகாலமாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ள பங்குடமையை அண்மையில் கொண்டாடியுள்ளது. இலங்கையிலுள்ள ஸ்மார்ட்போன் பாவனையாளர்களுக்கு Huawei ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஏனைய துணைச் சாதனங்களை வழங்குவதில் பிரத்தியேகமான, தேசிய விநியோகத்தராக சிங்கர் ஸ்ரீ லங்கா செயற்பட்டு வருகின்றது.

இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையிலான பங்குடமையானது 2012 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டதுடன், சிங்கர், தனது விசாலமான விநியோக வலையமைப்பின் செல்வாக்குடன், Huawei உற்பத்திகள் நாடெங்கிலும் பெரும் எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை எட்டுவதற்கு வழிவகுத்துள்ளது. சிங்கருடன் ஏற்படுத்தியுள்ள வெற்றிகரமான பங்குடமையின் துணையுடன், 2015 ஆம் ஆண்டில் நாட்டில் இரண்டாவது ஸ்தானத்தை எட்டிப்பிடித்த ஸ்மார்ட்போன் வர்த்தகநாமம் என்ற சாதனையை Huawei நிலைநாட்டியிருந்தது. Huawei வர்த்தகநாமத்தின் துணையுடன், சிங்கரின் ஸ்மார்ட்போன் வர்த்தகம் வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன், சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் சார்ந்த ஸ்மார்ட்போன் பாவனையாளர்களின் கவனத்தை தன்பால் திசைதிருப்பவும் உதவியுள்ளது.

Huawei உடன் சிங்கர் பேணிவந்துள்ள ஐந்து ஆண்டுகால வர்த்தக பங்குடமை தொடர்பில் சிங்கர் ஸ்ரீ லங்கா குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,கடந்த ஐந்து ஆண்டுகளாக Huawei உடன் பங்காளராக இணைந்து செயற்பட்டு, அதனை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளமையை இட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். மிகக்குறுகிய காலப்பகுதியில் Huawei தனது பெயரை நிலைநாட்டியுள்ளதுடன், இலங்கையில் ஸ்மார்ட்போன்களின் பாரிய விற்பனையாளராகவும் சிங்கர் மாறியுள்ளதுஎன்றார்.

2016 டிசம்பரில் இலங்கையில் Huawei ஸ்மார்ட்போன் விற்பனையின் மூலமாக, ரூபா 1 பில்லியன் என்ற சாதனை இலக்கினை சிங்கர் கடந்துள்ளமை, நாட்டில் Huawei தனது வர்த்தக நாமத்தை விரிவுபடுத்துவதில் சிங்கருடன் கொண்டுள்ள நம்பிக்கையின் பரிமாணம் மற்றும் தொடர்ச்சியான சந்தைப்படுத்தல் மூலோபாயங்களை நிரூபித்துள்ளது.

Comments