ஆசிய பிரீமியர் லீக் டி/டுவெண்டி தொடர் நாளை நேபாளத்தில் | தினகரன் வாரமஞ்சரி

ஆசிய பிரீமியர் லீக் டி/டுவெண்டி தொடர் நாளை நேபாளத்தில்

இந்தியாவின் அல்டிமேட் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்படடுள்ள முதலாவது ஆசிய மீரிமியர் லீக் டி/ டுவெண்டி தொடர் நாளை 19ம் திகதி முதல் ஜுலை 04ம் திகதி வரை நேபாளத்தில் நடைபெறவுள்ளது.

6 அணிகள் பங்குகொள்ளவுள்ள இப்போட்டித் aதொடரில் நேபாளம், இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மற்றும் சர்வதேச போட்டிகளில் தற்போது விளையாடிவரும் வீரர்களும் பங்கு கொள்கின்றனர். நேபாள தேசிய அணியில் விளையாடும் வீரர்கள் அனைவரும் இத்தொடரில் கலந்து கொள்கின்றனர்.

ஆப்கானிஸ்தான் புல்ஸ், பங்களாதேஷ் டைகர்ஸ், டுபாய் வோரியர்ஸ், இந்தியன் ஸ்டார்ஸ், நேபாள் ஸ்டோம்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் லயன்ஸ் என ஆறு அணிகள் இத் தொடரில் களத்தில் குதிக்கவுள்ளன.

ஸ்ரீலங்கன் லயன்ஸ் அணிக்கு பர்வேஸ் மஹ்ருப் தலைமை தாங்கவுள்ளதுடன் மற்றொரு ஓய்வுபெற்ற இலங்கை வீரரான திலக்கரத்ன டில்ஷான் இந்தியன்ஸ் ஸ்டார்ஸ் அணிக்குத் தலைமை தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Comments