உலக கிண்ண உதைபந்தாட்டம்; ஈரான் அணி தகுதி | தினகரன் வாரமஞ்சரி

உலக கிண்ண உதைபந்தாட்டம்; ஈரான் அணி தகுதி

அடுத்த வருடம் நடைபெறவுள்ள பிபா உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் விளையாடுவதற்கு ஈரான் அணி தகுதி பெற்றுள்ளது.

2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிபா உலகக் கிண்ணத் தொடர் ஜூன் மாதம் 14 முதல் ஜுலை மாதம் 15 வரை நடைபெறவுள்ளது.

ஆசியப் பிராந்தியத்திலிருந்து இத்தொடரில் பங்கு கொள்ளும் அணிகளைத் தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.இதன் மூன்றாவது சுற்றில் ஜப்பான், ஈரான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகள் இரு குழுக்கள பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணி உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும்.

அதில் ஏ பிரிவில் அங்கம் வகிக்கும் ஈரான் கால் பந்தாட்ட அணி கடந்த வாரம் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற போட்டியொன்றில் உஸ்பெகிஸ்தான் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கிண்ணத்துக்கான தகுதியைப் பெற்றுக் கொண்டது. அப்பிரிவில் அவ்வணி இதுவரை 8 போட்டிகளில் 6 வெற்றிகளையும், 2 வெற்றி தோல்வியற்ற முடிவுடன் 20 புள்ளிகளுடன் முதலிடத்திலுள்ளது. மீதமுள்ள இரு போட்டிகளிலும் தோல்வியுற்றாலும் அவ்வணியின் தெரிவுக்கு பாதகமில்லை. 

Comments