இணைய சேவையின் வேகத்தை அதிகரிக்கும் எயார்டெல் லங்கா | தினகரன் வாரமஞ்சரி

இணைய சேவையின் வேகத்தை அதிகரிக்கும் எயார்டெல் லங்கா

தொழில்நுட்ப ரீதியாக தரமுயர்ந்த ஸ்மார்ட்போன்களைக் கொள்வனவு செய்த பின் இணைய சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் இடையூறுகளுக்கு முகங்கொடுக்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு எயார்டெல் தீர்வை வழங்கியுள்ளது.

Gemalto (Euronext NL0000400653 GTO) உடன் சமீபத்தில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இணைப்பின் மூலமாக, எயார்டெல் லங்கா நிறுவனம், தற்போது மனிதனின் தலையீடின்றி, தன்னியக்க முறையில் தனது வாடிக்கையாளர்களின் தொலைபேசி சாதனங்களை கண்டறிந்து, உரிய கட்டமைப்பு செயற்பாடுகளை மேற்கொள்ள முடிவதுடன், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான இணையத்தளங்களை எவ்வித இடையூறுகளுமின்றி பார்த்து மகிழ்வதற்கும் இடமளிக்கின்றது.

Gemalto இன் LinqUs சாதன முகாமைத்துவ தளமேடையானது, தற்போது உலகிலுள்ள மிகவும் அதிநவீன தளமேடைகளுள் ஒன்றாகக் காணப்படுகின்றது.

100,000 இற்கும் மேற்பட்ட சாதனங்களின் விபரக் குறிப்புக்கள் அடங்கிய மிகப்பாரிய அறிவுக் களஞ்சியங்களுள் ஒன்றாகவும் அது விளங்குகின்றது. தொடர்ச்சியாக தரமுயர்த்தப்பட்டு, GSMA இனால் இனங்காணப்படாத, உள்நாட்டு நவீன தொலைபேசி வகைகள், பிரபலமான வர்த்தக நாமங்கள் அல்லாத தொலைபேசி வகைகளின் விபரங்களைக் கூட உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில், ஸ்மார்ட்போன் விற்பனையாளர்கள், உள்நாட்டுச் சந்தையைக் கைப்பற்றுவதற்கு குறைந்த செலவிலான தொலைபேசி வகைகளை அறிமுகம் செய்வதற்கு போட்டியிட்டு வருவதால், முன்னர் ஒருபோதும் இருந்திராத வகையில், பல்வேறு வகைப்பட்ட தொலைபேசி சாதனங்கள் சந்தையில் அறிமுகமாகி வருகின்றன, என்று Gemalto இன் தெற்காசியா மற்றும் ஜப்பான் ஆகிய சந்தைகளுக்கான தலைமை அதிகாரியான மைக்கல் ஆவு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், நாம் வழங்கும் முழுமையான தீர்வின் மூலம், எயார்டெல் தற்போது கட்டமைப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்கும் செலவுகளில் 40வீதம் வரை சேமிக்க இடம் கிட்டியுள்ளது மட்டுமன்றி, தொலைபேசி சாதனங்கள் தொடர்பான துல்லியமான ஆய்வுகள் மற்றும் பாவனையின் போக்குகள் தொடர்பான தகவல்களுடன் வாடிக்கையாளர்களுடனான நெருக்கத்தை அதிகரித்து, வருமானத்தை மேம்படுத்தவும் வாய்ப்புக் கிட்டியுள்ளது என்றார். 

Comments