‘கட்டிட நிர்மாணக் கண்காட்சி 2017’ நிகழ்வில் சிறப்பான இடத்தை பிடித்திருந்த கிறவுண் பெயின்ட்ஸ் | தினகரன் வாரமஞ்சரி

‘கட்டிட நிர்மாணக் கண்காட்சி 2017’ நிகழ்வில் சிறப்பான இடத்தை பிடித்திருந்த கிறவுண் பெயின்ட்ஸ்

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் (BMICH) இல் அண்மையில் நடைபெற்று முடிந்த ‘கட்டிட நிர்மாணக் கண்காட்சி 2017’ (Construction Expo 2017) நிகழ்வில் கிறவுன் பெயின்ட்ஸ் ஆனது மிகவுயர்ந்த இடத்தை பிடித்திருந்தது. கண்காட்சி வளாகத்தின் மத்தியில் இருந்த மேடையில் அமைக்கப்பட்டிருந்த ஜட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் காட்சிக் கூடம் பக்கிங்ஹாம் மாளிகையின் உருவத்தில் காணப்பட்டது.

அதிமேன்மைக்குரிய பிரித்தானிய மகாராணியின் வெளிப்படையான நியமனத்தின் பேரில் ‘இராஜ அத்தாட்சிப் பத்திரம்’ (Royal Warrant) பெற்ற இலங்கையின் ஒரேயொரு வர்ணப்பூச்சு (பெயின்ட்) என்ற பெருமைக்குாிய அந்தஸ்தை வெளிப்படுத்தும் விதமாகவே இக்காட்சியறை இவ்வுருவத்தில் அமைக்கப்பட்டிருந்தது. Royal Warrant என்பது இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக நீடித்து நிலைத்திருக்கும் சிறப்புப் பெயராக காணப்படுகின்றது.

கட்டிட நிர்மாணத் துறையின் மிக முன்னேற்றகரமான புத்தாக்கங்களை காட்சிப்படுத்தும் விடயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக முன்னேறியிருக்கும் இக்கண்காட்சியானது இத்துறையிலுள்ள அனைத்து முக்கியமான உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களும் ஒன்றுகூடுவதற்கான ஒரு களமாக அமைந்திருந்தது. 

Comments