வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள இடையூறுகள் குறித்து மக்கள் அதிருப்தி | தினகரன் வாரமஞ்சரி

வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள இடையூறுகள் குறித்து மக்கள் அதிருப்தி

 கந்தப்பளை  
ஆர். பாலசந்திரன்
 

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் லயன் வாழ்க்கை முறை இல்லாதொழிக்கப்பட்டு, புதிய கிராமம் உட்கட்டமைப்பு வசதிகளின் ஒரு அம்சமான தனித்தனி வீடுகள் அமைத்துக் கொடுக்கும் வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நுவரெலியா மாவட்ட வலப்பனை தேர்தல் தொகுதியில் உள்வாங்கப்பட்டுள்ள அல்மா , சரணவள்ளி, சீட்டன், ஹைபொரஸ்ட் 2ஆம் இலக்கம் ஆகிய தோட்டங்களில் வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.

ஆனால் இத்திட்டத்தை ஆரம்பித்தும் நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் பற்றி தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியும் ஆட்சேபனையும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வீடமைப்புத் திட்டத்தின் கீழ் அல்மா, சரணவள்ளி, சட்டன் ஆகிய தோட்டங்களில் வீடமைப்புத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணிப்பகுதியில் இருக்கும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதற்கு உரிய அனுமதியைப் பெற்றுக்கொள்வதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் முடிவடையப் போகின்றன. ஆனால் இன்னும் மரங்களை அகற்றி வீடுகளை கட்டமுடியாத நிலை காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பொறுப்புள்ள அதிகாரிகள் உரிய இடத்திற்கு அறிவித்து அனுமதி பெற்று மரங்களை அகற்றி வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி முன்னெடுத்துச் செல்ல ஆவண செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பொதுமக்கள் மிகவும் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றனர். 

Comments