மான் | தினகரன் வாரமஞ்சரி

மான்

மான் பாலூட்டி வகையைச் சேர்ந்த இரட்டைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்காகும். அறிவியலில் மான் இனத்தை செர்விடீ என அழைப்பர். இவை இலை தழைகளை உண்ணும் இலையுண்ணி விலங்குகள். மான், ஆடு, மாடுகள் போல உண்ட உணவை இருநிலைகளில் செரிக்கும் அசைபோடும் விலங்குகள் வகையைச் சேர்ந்த விலங்கு. மான்கள் உலகில் ஆஸ்திரேலியா, அண்டார்டிக்கா தவிர்ந்த எல்லா இடங்களிலும் வாழ்கின்றன. பார்ப்பதற்கு மிகவும் சாதுவாக இருக்கும். மான்களில் புள்ளிமான், சருகுமான், சம்பார் மான், கவரிமான் என பல வகைகள் உள்ளன. கனடா, சைபீரியா போன்ற வடநிலப் பகுதிகளிலும் வாழும் மூசு அல்லது எல்க் எனும் மான் உலகிலேயே மிகப்பெரிய மான் இனம் ஆகும். இவற்றின் ஆண் மூசு, 2 மீட்டர் உயரமும் 540 – 720 கிலோ கிராம் (1200–1600 பவுண்டு) எடையும் உள்ள மிகப்பெரிய விலங்காகும். மான்களில் பொதுவாக ஆண் மான்கள் மட்டுமே அழகான கொம்புகளைக் கொண்டிருக்கும். கொம்புகள் கிளைத்து இருப்பதால் ஆண்மானுக்கு கலை என்று பெயர் பெண்மானுக்கு சிறிய கொம்புகளோ அல்லது அவை இல்லாமலோ இருக்கும். பெண்மானுக்குப் பிணை என்று பெயர். மானின் குழந்தைக்கு (குட்டிக்கு), மான்மறி என்று பெயர்.

பெ. திலானுஷா,

கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி,

கொழும்பு 04. 

Comments