LankaPay Technnovation விருதுகள் 2017 யூனியன் வங்கிக்கு நான்கு விருதுகள் | தினகரன் வாரமஞ்சரி

LankaPay Technnovation விருதுகள் 2017 யூனியன் வங்கிக்கு நான்கு விருதுகள்

 யூனியன் பாங்க் ஒஃப் கொழும்பு பிஎல்சி கடந்த ஜூன் 20ம் திகதி கிங்க்ஸ்பரி ஹோட்டலில் இடம்பெற்ற முதலாவது LankaPayTechnnovation விருதுகள் நிகழ்வில் குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தினை பெற்றுக்கொண்டது.

யூனியன் வங்கியானது, நான்கு பிரதான பிரிவுகளில் விருதுகளை பெற்றுக்கொண்டது. குறித்த இந்த விருதுகள் இந் தபோட்டியின் ஆரம்பத்தில் தொடர்பாடப்பட்ட வகையில்,குறிப்பிடப்பட்ட காலகட்டத்திற்குள் தனிப்பட்ட வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதிநிறுவனங்கள் ஆகியனவற்றுக்காக நிர்ணயிக்கப்படட தகைமைகளுக்கு இணைவாக சிறப்பான செயற்பாடுகளை முன்னெடுத்த நிறுவனங்களுக்கு அவற்றின் பரிவர்த்தனை பெறுமதிகள் மற்றும் எட்டப்பட்ட தொகுதிகள் ஆகியவற்றின் அடிப்படையில்,ஒவ்வொரு பிரிவிற்குமென அளிக்கப்பட்டது. இதன்படி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரஸ்வாமி தலைமையிலும்,புகழ்பெற்ற பேச்சாளரும்,சிங்கப்பூர் நாணய அதிகாரசபையின் பிரதம Fintech அதிகாாியுமான Sopnendu Mohanty பிரதம பேச்சாளராகவும் கலந்து சிறப்பித்த குறித்த நிகழ்வின் போது,யூனியன் வங்கியானது,பின்வரும் விருதுகளை தமதாக்கிக் கொண்டது.

இந்தவிருதுநிகழ்வில் வங்கியின் நிகரற்ற செயற்திறன் குறித்து கருத்துரைத்த யூனியன் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி இந்திரஜித் விக்கிரமசிங்க “வங்கித் தொழிற்துறையில் புத்தாக்க தொழினுட்ப பரப்பில் வங்கி வெளிக்காட்டிய ஆழ்ந்த வளர்ச்சிமற்றும் செயற்திறன் குறித்து நாம் மிகுந்த மகிழ்ச் சியடைகின்றோம். இந்தசாதனைகளே Technnovation 2017 விருதுகள் நிகழ்வில் முறையான கெளரவத்தினை எமக்கு அளித்துள்ளது. அதிதுாிதவளர்ச்சியினை நாட்டில் பெற்றுவரும் வங்கி என்ற ரீதியில், யூனியன் வங்கியானது ,செளகர்யத்தினை அளித்து, அதன் ஊடாக நிதிஉள்ளடக்கத்தினை அளிப்பதில் துணைநிற்கும் நவீன தொழினுட்பங்கள் மீது முதலீடுசெய்வதன் ஊடாக,வித்தியாசமாக வங்கிஅனுபவத்தினை எமது வாடிக்கையாளர்களுக்கு அளித்தலை அர்ப்பணிப்புணர்வுடன் யுூனியன் வங்கி முன்னெடுக்கின்றது” என்றார்

“யூனியன் வங்கியானது, Lanka Clear இன் பரீட்சார்த்த முன்னோடி செயற்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட வேளையில்,பொது ATM switch இல் இணைந்துகொள்வதான தௌியமான முடிவினை எடுத்த முதல் வங்கியாக விளங்குகின்றது. இத்திட்டமே தற்போது மிகவெற்றிகரமான திட்டமா கவிளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. யூனியன் வங்கி பெற்றுக்கொண்ட இந்தவிருதுகள் வங்கித்தொழிற்துறையில்,‘Technnovation ’ பரப்பில் வங்கிமுன்னிலை இடத்தினை எட்டியுள்ளமையினை உறுதிசெய்துள்ளதுடன், தொழினுட்பம் சார்ந்தவங்கியியல் செளகர்யங்களைநோக்கியதிசையில் வங்கிமுன்னெடுத்துவரும் பாரியமேம்பாடுகளையும் பறைசாற்றுகின்றது. 

Comments