Vespa மற்றும் Aprilia SR 150 இப்போது இலங்கை சந்தையில் | தினகரன் வாரமஞ்சரி

Vespa மற்றும் Aprilia SR 150 இப்போது இலங்கை சந்தையில்

கொலனியல் மோட்டார் (இலங்கை) லிமிட்டெட் (CMCL) நிறுவனத்தினால் Vespa மற்றும் Aprilia SR 150 ஈருந்து வண்டிகள் இலங்கை விற்பனைக்கு வந்துள்ளது.

கடந்த 23 ஆம் திகதி கொழும்பு யூனியன் பிளேஸ் கொலனியல் காட்சிக்கூடத்தில் Vespa மற்றும் Aprilia SR 150 ஈருந்து அறிமுகம் செய்து வைக்கப்படும் நிகழ்வு நடைபெற்றது. Piaggio குழுமத்துடன் இணைந்து இந்த நிகழ்வு இடம்பெற்றது.

Vespa ஈருந்து எந்த காலத்துக்கும் பொருத்தமான பயன்படுத்தக் கூடியதாகும். Aprilia மறக்கவியலாத பாரம்பரியத்துக்குரிய பந்தய ஈருந்தாகும். அத்துடன், மிக உயர்வான தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்ட ஸ்கூட்டர் அமைப்பைச் சேர்ந்த்தாகும்.

Vespa மற்றும் Aprilia SR 150 தற்போது உலக தரம்வாய்ந்த Colonial Motors (Ceylon) Limited காட்சியறைகளில் பெற்றுக் கொள்ளலாம். பாவனையாளர்களின் நன்மை கருத்து பூகோள ரீதியில் இலங்கையில் விற்பனை நிலையங்கள் விஸ்தரிக்கப்படவுள்ளது. இதன் மூலமாக பாவனையாளர் நன்மையடையவுள்ளனர்.

முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. டிகோ கிராப்பி இந்த ஈருந்துகளை வைபவ ரீதியாக காட்சிப்படுத்திய பின்னர், கருத்து தெரிவிக்கையில், Vespa மற்றும் Aprilia SR 150 இந்தியாவில் இரட்டிப்பாக வெற்றியடைந்துள்ளது. இலங்கையிலும் இதன் விற்பனையின் சாதனையை உருவாக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார். அங்கு கருத்து தெரிவித்த இயக்குநர் திரு. மோகன் ரத்நாயக்க, Vespa மற்றும் Aprilia ஈருந்துகள் இலங்கையருக்கும் கிடைக்கின்றது. இது உலக தரம் வாய்ந்தவைகளாகும். நாமும் Piaggio குழுவினருடன் இணைந்து செயற்படுகிறோம் என்றார். 

Comments