சின்ன மகள் | தினகரன் வாரமஞ்சரி

சின்ன மகள்

அனுஷா அமீர் அலி

சம்மாந்துறை

காத்திருக்கிறேன்

உன் அழகிய புன்னகைக்காக

உன் கண்கள் அசைவைக்காண

தவிக்கின்றேன்

உன் அழும் குரல்கேட்டு

துடிக்கின்றேன்

உன் பாதங்கள் நிலத்தைத்

தொடும்போது

ரசிக்கிறேன்

உன் அழகிய

அசைவுகளைப் பார்த்து

சிரிக்கின்றேன்

உன் முத்தம்பட்ட ஈரம்தொட்டு

மறக்கின்றேன்

உன் கரங்களால் என்னை

நீ அணைக்கும் போது

கவி வடிக்கின்றேன்

உன் அழகிய செயல்கள்

பார்த்து வேண்டுகின்றேன்

உன் பாசம் எனக்கு

எப்போதும்

 

வேண்டும் என்று

Comments