அப்பாவோடு அதர்வா | தினகரன் வாரமஞ்சரி

அப்பாவோடு அதர்வா

ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ நடித்தி ருக்கும் அதர்வா தனது தந்தையோடு ஒப்பிட வேண்டாம்தெரிவித்தார்.

அதர்வா, ஆனந்தி, ரெஜினா, பிரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி போகன்கர், சூரி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் படம் 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’. இந்த படத்தில் முதல் முறையாக அதர்வா 5 கதாநாயகிகளுடன் நடித்துள்ளார். இமான் இந்த படத்திற்கு இசையமத்துள்ளார். இளவரசு ஓடம் இயக்கியுள்ள இந்த படத்தை அம்மா கிரியேஸன்ஸ் சார்பில் சிவா தயாரித்து உள்ளார். இதுகுறித்து அதர்வா கூறும்போது,

தான் இதுவரை பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்தி ருந்தாலும், இதுவரை முழு காமெடி படத்தில் நடித்தில்லை என்றும், தான் நிறைய காமெடி கதைகளை கேட்டாலும், எந்த கதையும் தனக்கு சிரிப்பு ஏற்படுத்தும் விதமாக இல்லை. ஆனால் 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தின் கதை தனக்கு மிகவும் பிடித்ததாகவும், கதை கேட்ட பத்தாவது நிமிடத்தில் தனக்கு இந்த படம் சிறந்த காமெடி படமாக அமையும் என்று தோன்றியதாக அதர்வா தெரிவித்தார்.

மேலும் தான் நடிக்க வந்த பொழுது தனது தந்தை முரளியின் படத்தினை பார்க்கவில்லை.

தற்போது தனது தந்தை இருந்தால் தனக்கு எந்த மாதிரியான கதை, கதாபாத்திரம் பொருந்தும் என்று அவரிடம் கேட்கலாம். ஆனால் தமக்கு அந்த பாக்கியம் இல்லை, தன்னை தனது தந்தையோடு ஒப்பிட வேண்டாம் என்றும் அதர்வா கூறினார். 

Comments