சோறு கண்ட இடமே சொர்க்கமா? | தினகரன் வாரமஞ்சரி

சோறு கண்ட இடமே சொர்க்கமா?

சிலர் உழைப்பதற்காகச் சாப்பிடு வாங்க, இன்னுஞ்சிலபேர் சாப்பிடுறத்துக்காக உழைப்பாங்க. அநேகர் சாப்பிடாம லேயே உழைச்சு உருக்குலைவாங்க. கடைசியிலை காசு மட்டும் கையிக்ைக இருக்கும்; ஒண்டும் சாப்பிட ஏலாது. அதைச் சாப்பிட்டால் அந்த நோய் வரும், இதைச் சாப்பிட்டால் இந்த நோய் வரும் எண்டிட்டுக் கவலையோட குந்தியிருப்பாங்க. மொத்தத்திலை பணக்காரனா சாகிறதுக்காகப் பிச்சை க்காரனா வாழ்வாங்க! இப்பிடி நிறையபேரைப் பார்த்துக்ெகாண்டு இருக்கிறம்.

உழைச்சு சாப்பிட்டால்தான் உடம்பிலை ஒட்டும் எண்டு என்னதான் அறிவுரை சொன்னாலும், சமூகத்திலை அநேகமானவங்களுக்குக் கஞ்சி கண்ட இடம் கைலாசம், சோறு கண்ட இடம் சொர்க்கம். வயிற்றுப்பிழைப்புக்காக எதையும் செய்வாங்க. நம்பவே ஏலாது. ஒரு கொஞ்ச பேர்தான் மனச்சாட்சிக்குப் பயந்து, அடுத்தவனைக் கெடுக்காம, நேர்மையா வாழ்வாங்க. தொழில் செய்ற இடமாக இருந்தாலும் சரி, வேற எந்த இடமாக இருந்தாலும் சரி, தன்மானத்தையும் நேர்மையையும் விட்டுக்ெகாடுக்கமாட்டாங்க. அதுதான், ரோசன் கெட்டான், மழுங்கையன் பிழைச்சான் என்பாங்க. மழுங்கைத்தனமாக எதையும் எதிர்கொள்றவன் தற்காலிகமாக வெற்றியடைவான், சில உஷார் மடையர்களைப்போல...

என்னவாக இருந்தாலும் வயற்றுப்பசியைத் தீர்த்துக் ெகாள்றதுக்கு அல்லது தன்னை நம்பியிருப்பவர்களின் பசியைப்போக்குவதற்குச் சில பேர் ரோசத்தையும் தன்மானத்தையும் அடகு வைக்கும் சந்தர்ப்பங்களும் இருக்கும். அது நமக்குத் தெரியாது... ஒரு நண்பர் இருக்கார், சாப்பிட்ட உட​ேன கையைக் கழுவுங்கள் என்பார். அப்பதான் அடுத்த வேளைக்குச் சாப்பாடு கிடைக்குமாம். நாங்கள் எல்லாம் பந்தி யிலை இருந்தால்; சாப்பிட ஒண்டாக உட்கார்ந்தால், கதியா சாப்பிட்டிட்டு மற்றவர் சாப்பிட்டு முடியும் வரை கையைப் பிசைந்துகொண்டு இருப்பம். கை காய்ந்து வறண்டு போயிடும். அப்பவும் நம் நண்பர் ஆற அமர ரசிச்சு ருசிச்சுக் கல்யாண வீட்டிலை சாப்பிடுறமாதிரி சாப்பிட்டுக் ெகாண்டிருப்பார். கல்யாண வீட்டிலை எண்டால் பரவாயில்லை, காரியாலயத்திலை மன்னிக்கவும் அலுவலகத்திலை? இப்ப காரியாலயம் எண்டு சொல்றதும் இல்லை; எழுதுறதும் இல்லை. அபிவிருத்தியை மேம்பாடு எண்டு எழுதுறமாதிரி!

சாப்பிடும்போது கதையாதேடா! எண்டு அம்மம்மா சொல்லுவா. இது எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும். ஆனால், அலுவலகங்கள்ல இருக்கிற கன்ரீன்கள்ல பாத்தீங்க எண்டால், மீன்கடை மாதிரி இருக்கும். கதையெண்டால், அப்பிடி கதை. ஒபீஸ்கள்ல பிரச்சினை வாறத்துக்குக் காரணமே இந்தக் கன்ரீன்தான் என்ற ஓர் அபிப்பிராயம்கூட இருக்கு. சகபாடிகள் அதை நிரூபிச்சுக்ெகாண்டு கதை அளந்து கொண்டு இருப்பாங்க. அநேகமாக அடுத்தவங்களோட கதையாத்தான் இருக்கும். யார் யாரோட கதைக்கிறார்? ஆர் ஆரைக் கல்யாணம் செய்திருக்கார்? அவள் புருஷனை விட்டிட்டாளாம்; தனியாத்தான் இருக்கிறாளாம். ஒரே டிபாற்மென்ற்ல வேலை செஞ்சாலும் புருஷனும் பொஞ்சாதியும் ஒண்டா சாப்பிடுறதில்லையாம்! புருஷன் பொஞ்சாதியா இல்லாட்டியும் அவங்க ரெண்டுபேரும் ஒண்டாத்தான் சாப்பிடுவாங்களாம் விதி படத்திலை இளநீர் குடிச்ச மாதிரி.. அப்பிடி... அப்பிடியே...நிர்வாக ஓட்டை, சீரழிவு அது இது எண்டு ... கடைசியிலை பெருமூச்சு விட்டிட்டுக் கையைக் கழுவிக்ெகாண்டு வர வேண்டியதுதான் மற்றவங்களுக்கும் சேர்த்து! கையை மட்டுமா கழுவுவாங்க...? அப்பப்பா! வீட்டிலை இருந்துகொண்டு வந்த சாமான் சக்கட்டுகள். பிளாஸ்ரிக் போத்தல்கள், கரண்டிகள் என எல்லாத்தையும். வீட்டிலை அடுப்படி பக்கமே போகாத ஆக்கள்கூடக் கன்ரீன்ல கழுவிக்ெகாண்டு இருப்பதைப் பார்க்க பாவமாக இருக்கும்!

இனிப் பிளாஸ்ரிக்கிலை சாப்பாடு எதுவும் கொண்டு போக ஏலாது என நினைக்கிறன். செப்டம்பர் மாசத்திலை இருந்து பிளாஸ்ரிக், றெஜிபோம் சாப்பாடு பக்கற், லன்ச்சீற், ஷொப்பிங் பை எல்லாத்தையும் அரசாங்கம் தடை செய்யப்போகுதாம். இப்ப கடைகளுக்குப் போனாலும், பீங்கானுக்கு மேலால லன்ச் சீற் போட்டுத்தான் சாப்பாடு கேக்குறாங்கள். இனி அப்பிடி கேக்க ஏலாது. மற்றவங்க புளங்கின கோப்பையிலைத்தான் சாப்பிட வேணும். முந்தி நான் பார்த்திருக்கிறன், ஒரு பீங்கானிலை சோறு, கறி வைச்சு அதை இன்னொரு பீங்கானை வைச்சு மூடி துணியாலைக் கட்டியிருப்பாங்க.

இது கொழும்பிலதான் அதிகம். சைக்கிள்ல வீடுகளுக்குப் போய் சாப்பாட்டை வாங்கிக்ெகாண்டு வந்து ஒபிசிலை குடுப்பாங்க. ஊர்கள்ல வெவ்வேறு விதமாகச் சாப்பாட்டைக் கட்டிக்ெகாண்டு போவாங்க. ஊர்கள்ல வாழை இலை முக்கிய இடத்தைப் பிடிச்சிருக்கும். இனி நாடு முழுக்க வாழை இலைக்கும் பீங்கான்களுக்கும் நல்ல கிராக்கி வரத்தான் போகுது! ஆனால், வாழை நாட்டுறத்துக்குக் காணிதான் பிரச்சினை. கொழும்பிலை மட்டுமில்லை, ஊர்கள்லயும், உள்ள காணியைக் குடுத்திட்டு வாயைப் பாத்துக்ெகாண்டுதானே இருக்க வேண்டிக்கிடக்கு.

சரி அது கிடக்கட்டும். பிளாஸ்ரிக் பற்றி இன்னும் நிறைய கதைக்கலாம். சாப்பாடு என்னத்தாலை கொண்டு வந்தாலும் பரவாயில்லை.. வாயை மூடிக்ெகாண்டு சாப்பிட வேணுமாம். அப்பதான் வெளியாலை இருந்து வயிற்றுக்குள்ள காத்து உள்ளுக்ைக போகாதாம். வாயை மூடி நல்லா சவச்சு சாப்பிட வேணுமாம்.

அப்பிடிச் சாப்பிட்டால்தான் இலகுவா சமிபாடு அடையுமாம். அதனாலதான் கதைக்காமல் வாயை மூடிக்ெகாண்டு சாப்பிடச் சொல்லி அம்மம்மா சொல்லியிருக்கா. இதை ஆர் கேட்பாங்க. சில பேருக்கு மற்றவங்க விசயத்தைக் கதைக்காட்டிச் சாப்பாடு சமிபாடு அடையாது என்றது அம்மம்மாவுக்குத் தெரியேல்லபோல...! 

Comments