ஆர்பிகோவின் சிறந்த ஹார்ட்வெயார் விநியோகஸ்த்தர்கள் கெளரவிப்பு | தினகரன் வாரமஞ்சரி

ஆர்பிகோவின் சிறந்த ஹார்ட்வெயார் விநியோகஸ்த்தர்கள் கெளரவிப்பு

இலங்கையின் மாபெரும் வியாபாரங்களில் ஒன்றாக புகழ்பெற்றுத்திகழும் ஆர்பிகோ, தனது சிறந்த விநியோகஸ்த்தர்களுக்கான மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

பாசிக்குடா அமாயா பீச் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது, 150க்கும் அதிகமான சிறந்த ஹார்ட்வெயார் விநியோகஸ்த்தர்கள் பங்கேற்றிருந்தனர். நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ அங்கத்தவர்கள், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பிரிவுகளின் உயரதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

கடந்த ஆண்டு முழுவதிலும் ஆர்பிகோ தயாரிப்புகளை விற்பனை செய்வதிலும், நிறுவனத்துடன் வெற்றிகரமாக தமது உறவுகளை பேணுவதில் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்த விநியோகஸ்த்தர்களை கெளரவிக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது. விநியோகஸ்த்தர்கள் தமது செயற்பாடுகளுக்கும், வருமானத்தை அதிகரித்துக் கொள்வதில் வழங்கியிருந்த பங்களிப்பை மேம்படுத்திக் கொள்ளவும் உள்நாட்டு நிர்மாணத்துறையை விஸ்தரிப்பு செய்து கொள்ள பங்களிப்பு வழங்கியிருந்தமையை கெளரவிக்கும் செயற்பாடுகளையும் ஆர்பிகோ முன்னெடுத்திருந்தது. ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனியின் LMD பிரிவின் முகாமைத்துவ பணிப்பாளர் சுனில் லியனகே கருத்துத் தெரிவிக்கையில், கடந்த காலங்களில், ஆர்பிகோ தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பொருட்களின் தரம், நீடித்த பாவனை மற்றும் சேவை வழங்கல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. எமது உத்தரவாதமளிக்கப்பட்ட தரம் என்பது எமது தயாரிப்புகளில் பிரதிபலிக்கப்படுவதுடன், நாடு முழுவதையும் சேர்ந்த நிர்மாணத்துறை நிறுவனங்களுக்கு ஹார்ட்வெயார் வழங்குநராக திகழும் எமது நிலையையும் உறுதி செய்திருந்தது.

இந்த வர்த்தக நாம உறுதி மொழியை தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் உழைத்த முழு அணியினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மேலும், நிறுவனத்தின் பரந்தளவு ஹார்ட்வெயார் தெரிவுகளில் ஆர்பிகோ நீர் தாங்கிகள், ஆர்பிகோ ரெஜிஃபோம்கள், ஆர்பிகோ இறப்பர் மற்றும் ஆர்பிகோ PVC போன்றன உள்நாட்டு நிர்மாணதது் றையின் வளர்ந்து செல்லும் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. 

Comments