நீல நிறத்தில் Huawei அறிமுகப்படுத்தும் GR3 2017 | தினகரன் வாரமஞ்சரி

நீல நிறத்தில் Huawei அறிமுகப்படுத்தும் GR3 2017

இலங்கையில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, Huawei GR3 2017 என்ற பிரதான ஸ்மார்ட்போன் உற்பத்தியின் உப வடிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள GR3, நீல நிறத்தில் வெளிவந்துள்ளதுடன், இந்த மாதத்தின் ஆரம்பம் முதற்கொண்டு இலங்கையில் கிடைக்கப்பெறுகின்றது. தனித்துவமான பண்புகள் மற்றும் மெல்லிய தோற்றம் கொண்ட சிறப்பம்சங்களுக்காக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள Huawei G3 2017 Blue, Google இன் Android 7.0 தளத்தில் கிடைக்கப்பெறுகின்றது. பிரதான உற்பத்தி வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த சமயத்தில், அது பொன், வெள்ளி மற்றும் பளுப்பு ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கப்பெற்றது.

தற்போது புதிய நீல வடிவத்துடன், பிரகாசமான மற்றும் மெல்லிய தோற்றத்தை ஸ்மார்ட்போன் பாவனையாளர்கள் தெரிவுசெய்ய முடியும்.

இச்சாதனம், 5.2 அங்குல முகத்திரையைக் கொண்டுள்ளதுடன், 5 புள்ளிகளில் பன்முக தொடுகைக்கு உதவுகின்ற வகையில் 2.5d வளைந்த மேற்பரப்புடனான முழுமையான தொடுகைத் திரையையும் கொண்டுள்ளது. LCD

முகத்திரையானது IPS FHD 1920*1080 மற்றும் 16M வர்ணங்களில் உயர் பிரிதிறனைக் கொண்டுள்ளது.

அதி வேக LTE வலையமைப்பு ஆகிய தொழில்நுட்ப சிறப்பம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. GR3 2017 12MP Auto Focus பின்புற கமெரா மற்றும் LED Flash+ 8MP குறைந்த வெளிச்சத்திலும், சிறப்பான படப்பிடிப்பிற்கு நிலையான நோக்கு கொண்ட முன்புற கமெரா மற்றும் 1.25um pixel கொண்ட பாரிய பின்புற கமெராவைக் கொண்டுள்ளதுடன், படம் எடுக்கும் வேளையில் எழுகின்ற சத்தத்தையும் குறைக்க உதவுகின்றது.

Huawei இன் GR3 உற்பத்தி வரிசையில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இச்சாதனம் தொடர்பில் இலங்கையில் Huawei Device இற்கான உள்நாட்டு முகாமையாளரான ஹென்றி லியு கூறுகையில், எமது வாடிக்கையாளர்களுக்கு வலுவான மற்றும் புதிய சாதனங்களை வழங்குவதில் Huawei எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், இலங்கையில் GR3 Blue நிற உற்பத்தி வடிவத்தை அறிமுகம் செய்வதையிட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளோம். தனித்துவமான நிறத்தில் கிடைக்கின்ற இந்த Huawei ஸ்மார்ட்போன், ஏனைய நாடுகளில் வெகுவான வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Comments