2017ஆம் ஆண்டிற்கான கட்டட நிர்மாண கண்காட்சி ஆகஸ்ட் 25 முதல் 27 வரை BMICH இல் | தினகரன் வாரமஞ்சரி

2017ஆம் ஆண்டிற்கான கட்டட நிர்மாண கண்காட்சி ஆகஸ்ட் 25 முதல் 27 வரை BMICH இல்

இலங்கையின் ‘நம்பா்-1’ கட்டிட நிர்மாணக் கண்காட்சியாக காணப்படுகின்ற அதேநேரத்தில் சந்தேகத்திற்கு இடமற்ற விதத்தில் இலங்கையில் இடம்பெறுகின்ற மிகப் பெரியதும் மிக மதிப்புமிக்கதுமான நிர்மாணத்துறை சார்ந்த கண்காட்சியாகவும் திகழ்கின்ற ‘கட்டிட நிா்மாணம் 2017’ கண்காட்சியானது ஆகஸ்்ட் 25 முதல் 27 வரை இலங்கை, கொழும்பு சிறிமாவோ பண்்டாரநாயக்க கண்காட்சி நிலையத்தில் (SBMEC) நடைபெறவுள்ளது.

தென்னாசியப் பிராந்தியத்தில் மிகவும் செல்வாக்குச் செலுத்துகின்ற, முக்கிய கண்காட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்நிகழ்வானது, தேசிய நிர்மாண சங்கம் இலங்கையினால் (NCASL) தொடர்ச்சியாக 17ஆவது வருடமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய நிர்மாண சங்கம் இலங்கையின் தலைவர் அதுல பிரியந்த கலகொட கூறுகையில், “மிகவுன்னதமான நிகழ்வாகவும் அதேநேரத்தில் பெருமளவிலான உள்நாட்டு, வெளிநாட்டு துறைசார் நிபுணர்களை தம்பக்கம் கவர்ந்திழுக்கும் நிகழ்வாகவும் திகழ்கின்ற ‘கட்டிட நிா்மாணம் 2017’ கண்காட்சியை நடாத்துவதையிட்டு நாம் மிகவும் பெருமிதம் அடைகின்றோம். சக்திவாய்ந்த இந்நிகழ்வு கட்டிட நிர்மாணத் துறை தொடர்பிலான பெருமளவு தீா்வுகளை வழங்கும் ஒரு தளமேடையாக காணப்படும். நவீன முறையிலான தொனிப்பொருளுக்கு அமைவாக அமைக்கப்பட்டுள்ள காட்சிக் கூடங்கள் மற்றும் புத்தாக்கமான, செயலாற்றல் கொண்ட முறைமைகள் என்பவற்றை கொண்டிருப்பதன் மூலம், இலங்கை மற்றும் இப் பிராந்தியத்தில் உள்ள பரந்துபட்ட மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பம்சங்களை வழங்கவிருக்கின்ற ‘கட்டிட நிர்மாணம் 2017’ கண்காட்சியானது, இங்கு வருகைதரும் பார்வையாளர்களின் மனப்பதிவுகளை மாற்றியமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கினை வகிப்பதுடன், உலகளாவிய போக்குகளுக்கு அமைவான விதத்தில் எதிர்காலத்திற்குப் பொருத்தமான அணுகுமுறையின் பக்கம் அவர்கள் வழிநடாத்தப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

“2001ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கண்காட்சியின் செயற்படுத்தல் திட்டத்துடன் மேலும் பல சிறப்பம்சங்கள் கூட்டிணைக்கப்பட்டுள்ள நிலையில் இக்கண்காட்சி மிக வேகமாக வளா்ச்சியடைந்திருக்கின்றது. பொது மக்களுக்கு மிகவும் முன்னேற்றகரமான தொழில்நுட்ப அணுகுமுறைகளை வழங்குவதுடன், இங்கு காட்சிப்படுத்தும் தரப்பினருக்கு வரையறையற்ற வாய்ப்புக்களை வழங்குவதற்காகவே இந்த ‘கட்டிட நிர்மாணமாணம்’ நிகழ்வு உருவாக்கப்பட்டது.

Comments