உலக தடகள போட்டிக்கு நிமாலி தகுதி | தினகரன் வாரமஞ்சரி

உலக தடகள போட்டிக்கு நிமாலி தகுதி

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி முதல் 13ம் திகதி வரை லண்டனில் நடைபெறவிருக்கும் உலகக் தடகள போட்டித் தொடரில் பங்கு பற்றுவதற்கான தகுதியை இலங்கையின் ஓட்டவீராங்கனை நிமாலி லியனாராச்சி பெற்றுக் கொண்டார்.  
இவர் கடந்த வாரம் இந்தியாவின் புவனேஸ்வர் நகரில் முடிவுற்ற 22வது ஆசிய மெய்வல்லுநர் போட்டித் தொடரில் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றார். 
இவர் இவ்வோட்டத் தூரத்தை 2.05.25 வினாடிகளில் ஓடி முடித்து உலக தடகளப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றார்.  
அடுத்த மாதம் லண்டனில் நடைபெறும் உலக தடகள போட்டிகளில் உலகெங்கிலுமுள்ள சிறந்த தடகள வீர வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளதால் இது ஒலிம்பிக் போட்டிகளைப் போன்று மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். 
மேலும் இத்தடகள தொடருடன் உலக சாதனையாளரும் ஜமைக்காவின் குறுந்தூர ஓட்ட வீரருமான உசேன் போல்ட் ஓய்வு பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Comments