டென்னிஸ் அரங்கில் வீனஸ் வில்லியம்ஸ் புதிய உலக சாதனை! | தினகரன் வாரமஞ்சரி

டென்னிஸ் அரங்கில் வீனஸ் வில்லியம்ஸ் புதிய உலக சாதனை!

அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ், டென்னிஸ் அரங்கில் புதிய உலக சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 23 வருடங்களுக்கு பிறகு, மிகவும் வயதான வீராங்கனையாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய வீராங்கனை என்ற சாதனையை வீனஸ் வில்லியம்ஸ் படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக 1994ஆம் ஆண்டு சுவிஸ்சர்லாந்தின் மார்ட்டினா நவரத்திலோவா தனது 38 வயதில் அரை இறுதிக்கு முன்னேறியிருந்தார். அதை தற்போது 37 வயதில் வீனஸ் வில்லியம்ஸ் தற்போது முறியடித்துள்ளார். நடைபெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டியில், லத்வியாவின் ஜெலேனா ஒஸ்டா பென்கோவாவை வீழ்த்தியதன் மூலம் வீனஸ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். 

Comments