பேயர்ன் முனிச் வீரர் டக்ளஸ் கோஸ்டாவை கடனுக்கு வாங்கியது யுவான்டஸ் | தினகரன் வாரமஞ்சரி

பேயர்ன் முனிச் வீரர் டக்ளஸ் கோஸ்டாவை கடனுக்கு வாங்கியது யுவான்டஸ்

x

பேயர்ன் முனிச் அணியில் விளையாடும் பிரேசில் வீரரை இத்தாலியின் தலைசிறந்த ‍கழக அணியான யுவான்டஸ் கடனுக்கு வாங்கியுள்ளது.

ஜெர்மனியில் நடைபெறும் கால்பந்து தொடரான பண்டேஸ்லிகா தொடரில் விளையாடும் அணி பேயர்ன் முனிச். இந்த அணிக்காக பிரேசில் நாட்டின் டக்ளஸ் கோஸ்டா விளையாடி வருகிறார்.

இவரை இத்தாலியின் ‘செரி ஏ’ கால்பந்து தொடரில் விளையாடும் முன்னணி கழக அணியான யுவான்டஸ் வாங்க விரும்பியது. இதற்கு முன்னோட்டமாக அவரை முதலில் கடனுக்கு வாங்கியுள்ளது.

இதற்காக பேயர்ன் முனிச் அணிக்கு 6 மில்லியன் யூரோ வழங்கியுள்ளது.

அவர் சிறப்பாக விளையாடினால் மேலும் ஒரு மில்லியன் யூரோ வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. அடுத்த பருவத்தில் 40 மில்லியன் யூரோவிற்கு டிரான்ஸ்பர் செய்யப்படலாம் எனக்கூறப்படுகறிது.

ரியல் மட்ரிட் அணிக்காக விளையாடி வந்த கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸை பேயர்ன் முனிச் இரண்டு வருடத்திற்கு கடனாக பெற்றுள்ளது. 

Comments